உள்ளூர் செய்திகள்

புதிர் கணக்கு!

ஒரு குளத்தில் பெரிய தாமரைப் பூக்கள் அழகாக மலர்ந்திருந்தன. அந்தக் குளத்தை நோக்கி சில பறவைகள் வந்தன. குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்கள் பறவைகளை கவர்ந்தன.ஒவ்வொரு தாமரைப் பூவும், பட்டு சிம்மாசனம் போல இருக்கிறது. 'நாம் கொஞ்சம் நேரம் இந்தப் பூக்களில் உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு, பிறகு போகலாம்' என்று ஒரு பறவை கூறியது.அதை மற்ற பறவைகள் ஏற்றுக் கொண்டன.உடனே, ஒவ்வொரு பூவிலும் ஒரு பறவை வீதம் உட்கார்ந்தன. அவ்வாறு உட்கார்ந்த போது, ஒரு பறவைக்கு பூ கிடைக்கவில்லை. அதனால், பறவைகள், ஒரு பூவுக்கு இரண்டு பறவைகள் வீதம் உட்கார லாம் என்று முடிவு செய்தன. அதன் படி, ஒவ்வொரு பூவுக்கும் இரண்டாக உட்கார்ந்தன. அப்படி உட்கார்ந்த போது ஒரு பூ மீதம் இருந்தது.அப்படியானால், குளத்தில் இருந்த பூக்கள் எத்தனை? அதில், உட்கார வந்த பறவைகள் எத்தனை? என்று கண்டுபிடிங்க பார்க்கலாம்!விடை: பூக்கள் மூன்று, பறவைகள் நான்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !