முள்ளங்கி இலை பொரியல்!
தேவையான பொருட்கள்:முள்ளங்கி இலை - 100 கிராம்வெங்காயம் - 1தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டிஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டிமிளகு, சீரகம் - 1 தேக்கரண்டிபெருங்காயம், மஞ்சள் துாள், எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவுகறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, கடுகு - சிறிதளவு.செய்முறை:சிறிது தண்ணீருடன் உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து, கொதிக்க வைக்கவும். அதில், பொடியாக நறுக்கிய முள்ளங்கி இலையை நன்கு வேக விடவும்.கடாயில், எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், பெருங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு தாளிக்கவும். அதில் வேக வைத்த முள்ளங்கி இலை, தேங்காய் துருவல் சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும். சுவைமிக்க, 'முள்ளங்கி இலை பொரியல்' தயார். கலந்த சாதம், சாம்பார், ரசம் சாதத்துடன் சாப்பிட ஏற்றது. - ஜி.பாரதி, திருநெல்வேலி