உள்ளூர் செய்திகள்

பழி! (2)

புதிய பீட் கான்ஸ்டபிளிடம் யாரோ ஒரு நபர் ஏதோ பரப்பரப்பாக பேசினார். கான்ஸ்டபிளும் அவருடன் அவசரமாகச் சென்றார்.''அங்கு என்ன நடக்கிறது...?'' என்று கிசு கிசுத்தான் மறைவிடத்திலிருந்த அருண், செல்வத்திடம்.''பொறுத்திருப்போம்... நடப்பதைக் கண்காணிப்போம்!'' என்றான் செல்வம்.சற்றைக்கெல்லாம் பைனான்ஸ் கம்பெனி வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து, கான்ஸ்டபிளும், வேறு இருவரும் இறங்கினர்.''செல்வம், அந்தக் கார்...? அவர்கள்...!''''என் ஊகம் சரி என்றே நினைக்கிறேன் அருண். அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி விட்டனர். நாம் விரைந்து செயல்பட வேண்டிய வேளை வந்துவிட்டது... கிளம்பு!''பைனான்ஸ் கம்பெனியின் நுழைவாயிலை காரில் வந்தவர்களில் ஒருவர் திறக்க, மூவரும் வேகமாக உள்ளே புகுந்தனர். அவர்கள் உள்ளே சென்றதும் செல்வமும், அருணும் அங்கே போயினர்.''பலே... கதவைத் திறந்து வைத்திருக் கின்றனர். அவர்கள் வெளியேற வசதியாக, நமக்காக அல்ல... சத்தமின்றி வா அருண்,'' எச்சரிக்கை விடுத்தபடி முன்னேறினான் செல்வம்.உள்ளே...!''கான்ஸ்டபிள் சார், நீங்கள் குறிப்பிட்டது போல இரும்புப் பீரோவை யாரும் திறந்ததாகத் தெரியவில்லையே...'' என்றார் வந்தவர்களில் ஒருவர்.''இரும்புப் பீரோவைத் திறந்து உள்ளே பாருங்கள். அதன் பிறகு எங்களுக்கு வந்த தகவல் போலியா, நிஜமா என்பதைத் தீர்மானிப்போம்,'' என்றார் மற்றவர். இரும்புப் பீரோவின் க்ளிக் ஓசைத் திறப்பு செல்வத்தின் குரலுடன் கலந்தது.''பலே வேலை! தோழர்களின் போலிகளான உங்கள் இருவரின் திட்டமும் வெற்றி பெற்றால் சரியான வேட்டையாகத்தான் இருக்கும். இல்லையா?''செல்வத்தின் குரல் கேட்டு கான்ஸ்டபிளும், மற்றவனும் திடுக்கிட்டுத் திரும்பினர்-''போலீஸ்...! ஓடு... ஓடு!'' என்று குழறினர். ஓடவும் முற்பட்டனர். ஆனால்...இரும்புப் பீரோவைத் திறந்தவர், ''போலீஸா? எனக்கு ஒண்ணும் புரியலையே. அப்போ என்னை அழைத்து வந்தது போலீசில்லையா! ஏதோ ஆபீஸிலே கொள்ளை முயற்சின்னு சந்தேகப்படறோம், வாங்கன்னு சொன்னாங்களே,'' என்று பிரமித்துப் போனார்.''திருடர்களுக்கு நீங்களே, கதவைத் திறந்து விட்டிருக்கீங்க... டூட்டியிலிருந்தது திருடர்களோட உள் ஆள்...'' என்றான் செல்வம், பைனான்ஸ் கம்பெனி முதலாளியிடம்.புதிய கான்ஸ்டபிளையும், கொள்ளையிடத் திட்டமிட்ட திருடனையும், லாக்கப்பில் அடைத்த பின் செல்வம் நடந்ததை இன்ஸ்பெக்டரிடம் விளக்கினான் .''ராஜேந்திரன் நாணயமானவர்; தங்கள் கை வரிசை அவரிடம் செல்லாது என்பதை அறிந்த திருடர்கள், அவரை அப்புறப்படுத்த நடத்திய நாடகம்தான் 'டிவி' அன்பளிப்பு, ரிஜிஸ்டர் தபாலில் பணம், போன்கால் எல்லாம். அதில், வெற்றி கண்டவர்கள் புதிய கான்ஸ்டபிளைத் தங்கள் வலையில் சிக்க வைப்பதில் சுலபமாக வெற்றி கண்டனர். அவருடைய உதவியோடு பைனான்ஸ் கம்பெனி முதலாளியின் வீட்டுக்குப் போய் அலுவலகத்தில் கொள்ளை முயற்சி என்று நாடகமாட, கான்ஸ்டபிளும் வந்திருப்பதால், கூட இருப்பவர் போலீஸ் அதிகாரி என்று நம்பி, அவர்களுடன் ஆபிஸுக்கு வந்து பணப்பெட்டியை செக் அப் செய்ய வந்திருக்கிறார். இரும்புப் பீரோவை திறந்ததும் அவரைத் தாக்கி விட்டு, கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவதுதான் அவர்கள் திட்டம்.''''ராஜேந்திரன், நீ குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டதில் எனக்குதான் ரொம்ப மகிழ்ச்சி!'' என்றார் இன்ஸ்பெக்டர், அவர் கையைக் குலுக்கியபடி.''ஒரு சாதாரண கான்ஸ்டபிள் மீது ஏற்பட்ட கரையை நீக்குவதில், அக்கறை காட்டிய உங்களுக்கு ரொம்ப நன்றி சார்!'' என்று குரல் தழுதழுக்க செல்வத்தின் கைகளைத் தன் இருகரங்களாலும் பற்றிக் கொண்டார் ராஜேந்திரன்.''உங்களைப் போன்ற கான்ஸ்டபிள்களைத்தான் இந்த இலாகா காவல் பணிக்கு விரும்பு கிறது ராஜேந்திரன்!'' என்றான் செல்வம்.முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !