உள்ளூர் செய்திகள்

அவல் கட்லெட்!

தேவையான பொருட்கள்:அவல் - 1 கப்தயிர் - 1 கப்கேரட், வெங்காயம், குடைமிளகாய்,உருளை கிழங்கு, பச்சை பட்டாணி கலவை - 1 கப்இஞ்சி, பச்சை மிளகாய், கரம் மசாலா துாள், உப்பு, கடலை எண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு - தேவையான அளவு.செய்முறை:அவலை, தண்ணீரில் நன்றாக ஊறவைத்து வடித்து எடுக்கவும். அதில், தயிர், உப்பு, காய்கறி கலவை, மசாலா துாளை சேர்க்கவும். வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு, தாளித்து, அவல் கலவையை கொட்டி நன்றாக கலக்கவும்.பின், தவாவில் எண்ணெய் ஊற்றி, அவல் கலவையை, விருப்பமான வடிவத்தில் வார்த்து, சிவக்க வேக வைக்கவும். அவல் கட்லெட் தயார். சிறுவர்,சிறுமியர் விரும்பி உண்பர்!- உஷா மோகன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !