உள்ளூர் செய்திகள்

பள்ளியில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி முனிசிபல் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், ஆசிரியையாக, 1958ல் பணி கிடைத்தது. பணியில் சேரும் முன், திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். மாப்பிள்ளை வேலைக்கு செல்வதாக கூறி, நிச்சயம் செய்தனர். அவர் எங்கு, என்ன வேலை செய்கிறார் என்ற விவரத்தை மறைத்து விட்டனர். திருமணம் முடிந்ததும், ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். அங்கு, அதிர்ச்சி காத்திருந்தது. நான் பணியில் சேர்ந்த பள்ளியிலேயே, என் கணவர் பியூனாக இருந்தார். என் நிலையை எண்ணிப் பாருங்கள். இதை ரகசியமாக பாதுகாத்து வேலை செய்தோம். குழந்தை பிறந்த போது, உண்மை வெளியில் தெரிந்தது. அதற்குள், என் கணவரை, 11ம் வகுப்பு தேர்வு எழுத வைத்தேன். தேர்ச்சி பெற்றதும், பியூன் வேலையை ராஜினாமா செய்தார். ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவராக அவரை சேர்த்தேன். படித்து முடித்ததும், ஆசிரியர் வேலை கிடைத்தது. மூன்று ஆண்டுகளுக்குள் இதை சாதித்தேன். பெண்கள் நினைத்தால், சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.- முத்துலட்சுமி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !