வாழைப்பழ பூரி!
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2 ஆழாக்கு கனிந்த வாழைப்பழம் - 1 பொடித்த சர்க்கரை, தயிர், பொடித்த ஏலக்காய், சமையல் சோடா - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: மைதா மாவுடன் வாழைப்பழம், சர்க்கரை, தயிர், பொடித்த ஏலக்காய், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து, மூன்று மணி நேரம் வைக்கவும். பிறகு, மாவை மறுபடியும் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதை மாலை நேர சிற்றுண்டியாக கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். - ம.ராணி, வேலுார்.