உள்ளூர் செய்திகள்

வெள்ளரிக்காய் பூரி!

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் துருவல் - 1 கப் சோள மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு - 2 கப் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு - தலா 0.5 கப் தயிர், உப்பு, மிளகாய் - சிறிதளவு எள், எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: சோ ளம், கோதுமை, கடலை, பொட்டுக்கடலை, அரிசி மாவுகளுடன் தயிர், உப்பு, அரைத்த மிளகாய், வெள்ளரிக்காய் துருவல், எள், எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். அதை சிறிய உருண்டைகளாக பிடித்து பூரியாக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவைமிக்க, 'வெள்ளரிக்காய் பூரி!' தயார். மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏற்றது. - நா.நிலவரசி, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !