உள்ளூர் செய்திகள்

முருங்கைப் பூ கூட்டு!

தேவையானப் பொருட்கள்:முருங்கைப் பூ - 2 கப்பாசிப்பருப்பு - 100 கிராம்பெரிய வெங்காயம் - 2தக்காளி - 2பூண்டு பல் - 10பச்சை மிளகாய் - 4எண்ணெய், கடுகு, மஞ்சள் பொடி - சிறிதளவுகறிவேப்பிலை, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாசிப்பருப்புடன் நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய தக்காளி, பூண்டு, மஞ்சள் பொடி, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணை சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, நீள வாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் தாளித்து, சுத்தம் செய்த முருங்கைப் பூ போட்டு வதக்கவும். அதில், வெந்த பாசிப்பருப்பு கலவை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மருத்துவ குணம் நிறைந்த, 'முருங்கை பூ கூட்டு!' தயார். சுவை அமோகமாக இருக்கும்.- எம்.ராஜகுமாரி, திருவண்ணாமலை.தொடர்புக்கு: 99762 38430


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !