உள்ளூர் செய்திகள்

தயார் நிலை!

கும்பகோணம், நேடிவ் உயர்நிலைப் பள்ளியில், 1973ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...அன்று அரையாண்டு தேர்வு துவங்க இருந்தது. பாட வரிசை அட்டவணையை கவனிக்காமல் அறிவியல் பாடம் படித்து, தேர்வுக்கு தயாராக சென்றேன். வகுப்பாசிரியர் எம்.ஜெயராமன், 'தயாராக இருக்கிறாயா...' என்றபடி சில வினாக்களை கேட்டார். அனைத்திற்கும் 'கடகட' வென பதில் அளித்தேன். வெகுவாக பாராட்டி, 'நாளை தான் அறிவியல் தேர்வு... இன்று இல்லை...' என அனுப்பி வைத்தார்.எனக்கு, 63 வயதாகிறது; அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் தேர்வு அட்டவணை இடைவெளியை கவனிக்காமல் சென்றிருந்த என்னை, குறை சொல்லி கண்டிக்காமல் பாராட்டிய அந்த வகுப்பாசிரியரின் செயல் மனதில் நிலைத்துள்ளது. தயாராக இருந்தால், எதையும், எப்போதும் எதிர்கொள்ளலாம் என்ற பாடத்தை, அந்த சம்பவம் கற்றுத் தந்தது.- ஆர்.கிருஷ்ணன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !