உள்ளூர் செய்திகள்

தேங்காய் திரட்டு பால்!

தேவையான பொருட்கள்: தேங்காய்ப் பால் -- 1 கப் அரிசி மாவு -- 100 கிராம் பொடித்த கருப்பட்டி -- 400 கிராம் ஏலக்காய்த் துாள் -- 1 டீஸ்பூன் உப்பு, தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: பொடித்த கருப்பட்டியை, தண்ணீரில் சேர்த்து கொதிக்கவிடவும். கம்பி பதத்துக்கு கலவை வந்தவுடன், கீழே இறக்கி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் அரிசி மாவு, அரை கப் தேங்காய்ப் பால், தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பின், அடுப்பைக் குறைவான தீயில் வைத்து, இக்கலவையை கிளறி கொதிக்கவிடவும். அல்வா பதத்துக்கு வந்தவுடன், மீதமிருக்கும் தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும். பின், கருப்பட்டி பாகு, ஏலக்காய்த்துாள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான திரட்டு பால் தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். - ஆர்.நிவேதிதா, நாமக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !