உள்ளூர் செய்திகள்

கொய்யாக்காய் சட்னி!

தேவையான பொருட்கள்:கொய்யாக்காய் - 1சின்ன வெங்காயம் - 1 கப்பூண்டு - 10 பல்காய்ந்த மிளகாய் - 4மஞ்சள் துாள், புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவுநல்லெண்ணெய், உப்பு, உளுந்தம் பருப்பு - தேவையான அளவு.செய்முறை:நல்லெண்ணெய் சூடானதும், உரித்த வெங்காயம், உளுந்தம் பருப்பு, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, காய்ந்த மிளகாயை வறுக்கவும். அவற்றுடன், நறுக்கிய கொய்யாக்காய், புளி, மஞ்சள் துாள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிதமாக வதக்கி, சூடு ஆறியதும் அரைக்கவும். சுவை மிக்க, 'கொய்யாக்காய் சட்னி!' தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- -ர.யஷ்வர்த்தனி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !