ரோடஸ் சிலை!
கிரீசில் எழுப்பப் பட்டுள்ள 108 அடி உயரமுள்ள இந்தப் பிரம்மாண்ட சிலை, கிரேக்கர்கள் வழி பட்ட 'ஹெலியாசின்' என்ற சூரியக் கடவுளின் வடிவ மாகும். இதனை நிர்மாணித்து, முழுமையாக்க சுமார் பன்னிரெண்டு வருடங்கள் ஆயின. கல், இரும்பு மற்றும் வெண்கலம் ஆகியவை களின் கலப்பினால் வடிவமைக்கப்பட்டு, வெறும் இருபது ஆண்டுகள் மட்டுமே காட்சி தந்த இந்தச் சிலை கி.மு.226ம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தால் நொறுங்கிப்போய், வெறும் சிதறல்களாகவே காட்சியளிக்கிறது.வீழ்ந்து கிடந்த இந்தச் சிலை, கி.பி.653ம் ஆண்டு வரையிலும் எவரது கையும் படாமல் அப்படியே இருந்தது. ஆனால், பின்னர் படையெடுத்து வந்த அரேபியர்கள், அதனை உடைத்து சிறு, சிறு துகள்களாக்கி விற்பனை செய்து விட்டனர்.