ஸ்டூடண்ட்ஸ் கிரவுன்! - இரண்டு நிமிடத்துக்குள்...
லாவோஸ், கேப் வெர்டி, சைப்ரஸ், லிசாத்தோ... இந்த நாடுகளை, உலக வரைபடத்தில் காண்பியுங்கள் என்று கூறினால், நம்மில் எத்தனை பேரால் அது முடியும்... சொல்லப் போனால், உலகிலுள்ள நாடுகளில், செய்திகளில், அதிகமாக இடம்பெறும் நாடுகள் மற்றும் பிரபலமான நாடுகளின் பெயர்கள் மட்டும் தான், நம் நினைவில் இருக்கும். வரைபடத்தில் காட்ட சொன்னால், பலரும் திணறிப் போவோம். ஆனால், ஒரு நான்கு வயது சிறுமி, 200 நாடுகளின் கொடிகளை, இரண்டு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் அடையாளம் காட்டி யிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா...சென்னையை சேர்ந்த சிறுமி, தேஷ்னா அமிர்தவர்ஷினி, ஒரு நிமிடம், 53 நொடிகளுக்குள், 200 உலக நாடுகளின், தேசிய கொடிகளை, சரியாக அடையாளம் காட்டி, அகில இந்திய அளவில் சாதனை புரிந்துள்ளார். இந்நிகழ்ச்சி, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'ல் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை, பூவிருந்தவல்லியில் உள்ள, ஸ்ரீசைதன்யா பள்ளியில், யு.கே.ஜி., படிக்கும் தேஷ்னாவுக்கு, உலக நாடுகளை தெரிந்துக் கொள்வதில் உள்ள ஆர்வத்தை, பெற்றோர் ஊக்கப்படுத்த, இச்சாதனையை செய்துள்ளார். இவரது பெற்றோர், டி.ஆர்.நந்தகுமார் - டி.தேன்பிரியா இருவரும், வங்கி அதிகாரிகளாக பணிபுரிகின்றனர்.ஹாட்ஸ் ஆப் தேஷ்னா!