இனிப்பு தேங்காய் சாதம்!
தேவையான பொருட்கள்:சாதம் - 1 கப்தேங்காய் துருவல் - 1 கப் வெல்லம் பொடி - 1 கப்ஏலக்காய் பொடி, நெய், முந்திரி - தேவையான அளவு.செய்முறை:துருவிய தேங்காயை வறுத்து, வெல்லப்பொடி சேர்த்து பூரணமாக்கவும். அதில், சூடான சாதம், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். சுவை மிக்க, 'இனிப்பு தேங்காய் சாதம்' தயார். சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.- சங்கரி வெங்கட், சென்னை.