உள்ளூர் செய்திகள்

தக்காளி தோசை!

தேவையானப் பொருட்கள்:பச்சரிசி மற்றும் புழுங்கரிசி - 1 கப்உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டிபொரி கடலை பொடி மிக்சியில் பொடித்தது - 1 தேக்கரண்டிதக்காளி பெரியது - 2; நான்காக நறுக்கி கொள்ளவும்உப்பு - தேவையான அளவு.செய்முறை:முதலில், பச்சரிசி, புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஒன்றாக கலந்து, இரண்டு மணிநேரம் ஊற வைத்து, அதனுடன், நறுக்கிய தக்காளி துண்டுகளையும் சேர்த்து, நைசாக அரைக்கவும். அதில், உப்பு, பொரிகடலைப் பொடி சேர்த்து, நன்கு கலந்து, இரண்டு மணி நேரத்திற்குப் பின், தோசை வார்த்தால், சிவப்பு கலரில், சூப்பரான சுவையில், வித்தியாசமான தோசை ரெடி.தக்காளி சாப்பிடாத குழந்தைகள் கூட, இந்த தோசையை விரும்பி சாப்பிடுவர்!- ஆர்.ரமா, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !