உள்ளூர் செய்திகள்

நஞ்சு தரும் மனைவி!

ஐரோப்பிய நாடான பிரிட்டிஷ் பிரதமராக பதவி வகித்து புகழ் பெற்றவர், லாயிட் ஜார்ஜ். அவரது பதவி காலத்தில் தான், ஐரிஷ் சுதந்திரப் போர் மும்முரமாக நடந்தது. லாயிட் ஜார்ஜ் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் தெருக்களில், ரத்த ஆறு ஓட செய்தார்.காரியத்தில் மட்டும் கண்டிப்பானவர் அல்ல லாயிட்; பேச்சிலும் எவரையும் மிஞ்ச விட மாட்டார்.ஒரு நாள், பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்திலிருந்த பெண், அடிக்கடி குறுக்கிட்டு கூச்சலிட்டபடி இருந்தாள். அவளைச் சிறிதும் சட்டை செய்யாது, மடை திறந்தாற்போல, சொற் பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார் லாயிட். இது அவளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கூட்டத்தில் கூச்சலிட்டபடியே எழுந்தாள்.'நீர் என் கணவராயிருந்தால், நஞ்சைக் கொடுத்திருப்பேன்...' என்று கத்தினாள்.'என் மனைவியாக நீ இருந்திருந்தால், அதை வாங்கி, மகிழ்ச்சியுடன் சாப்பிட்டிருப்பேன்...' என்றார் லாயிட்.கூட்டத்தில் சிரிப்பு பரவியது.அந்த பெண் இருந்த இடம் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !