கறிவேப்பிலை துவையல்!
தேவையான பொருட்கள்:கறிவேப்பிலை - 3 கைப்பிடிகாய்ந்த மிளகாய் - 5உளுந்து - 2 தேக்கரண்டிபூண்டு - 2 பல்தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டிசீரகம், உப்பு, புளி - சிறிதளவுநல்லெண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், மிளகாய் வற்றல், உளுந்து போட்டு வறுக்கவும்; அத்துடன், பூண்டு, புளி, சுத்தம் செய்த கறிவேப்பிலை, சீரகம் போட்டு வதக்கவும். கறிவேப்பிலை நன்றாக வதங்கும் முன், தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கி விடவும். ஆறியதும், தேவையான உப்பு போட்டு நன்றாக அரைக்கவும். சத்தும், சுவையும் மிக்க, 'கறிவேப்பிலை துவையல்' தயார். சுடு சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம். இந்த உணவை அடிக்கடி உண்டால், இளநரை குறைபாடு நீங்கும்!- அனுஷா பிரபஞ்ச், சென்னை.