உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 62; தினமலர் நாளிதழ் தினமும் எங்கள் வீட்டில் மலர்கிறது. வாரந்தோறும், சிறுவர்மலர் இதழ் இதயத்தில் வாசம் செய்கிறது. கணவரை இழந்த எனக்கு, கவலையை மறக்க உற்ற துணையாக விளங்குகிறது. பள்ளிப்பருவ நினைவுகளை துாண்டுகிறது, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி. பண்புடன் அறிவை மேம்படுத்தி, நற்பாதை காட்டும் நீதிக்கதைகள். பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும், 'இளஸ் மனஸ்' பகுதி, அறிவுக்கு விருந்து. பாரம்பரிய சுவையை அள்ளித் தரும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' பகுதி இல்லத்தரசிகளை மகிழ்விக்கிறது. சிறுவர்களின் திறமையை, 'உங்கள் பக்கம்' பகுதி பிரகாசிக்க வைக்கிறது. பக்கத்திற்குப் பக்கம் அபாரமாக ஒளி வீசுகிறது. சிறுகதைகளின் முடிவில், 'குழந்தைகளே...' என அழைத்து அறிவுரை கூறுவது செம கலக்கல்.வாழ்வை மேன்மை படுத்தும் அறிவுக் களஞ்சியமான, சிறுவர்மலர் மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்!- சி.சசிகலா சந்திரன், சென்னை.தொடர்புக்கு: 97908 27341


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !