வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 64; அங்கன்வாடி மையத்தில், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில், நான் பணியாற்றிய மையத்துக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெண்களிடம், சிறுவர்மலர் இதழில் வரும், சமையல் குறிப்பை வாசித்துக் காட்டுவேன். அது போல் சமைக்க துாண்டுவேன்.'ஊரில் கிடைக்கும், தானியம், பருப்பு, கீரை வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அவற்றை சமைத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்...' என்று ஊற்சாகம் ஊட்டுவேன். மாதம் ஒருமுறை, செயல்முறை விளக்கமும் அளிப்பேன். உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக் கூறி, சுவைக்க கொடுத்து ஆர்வமூட்டுவேன்.வீட்டருகே வசிக்கும் சிறுவர், சிறுமியரிடம், சிறுவர்மலர் இதழைக் கொடுத்து படிக்க வைப்பேன். பள்ளியில் நடக்கும் கட்டுரை போட்டிகளில் பங்கேற்க துாண்டுவேன். என் பணிக்கு உதவிய சிறுவர்மலர் இதழ் வாழ்க வளமுடன்.- ந.சேது நடராஜன், விருதுநகர்.தொடர்புக்கு: 80129 94293