உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 70; சிறுவர்மலர் இதழை, 1986 முதல், படித்து வருகிறேன். இரவில் படுக்கைக்கு போகும் முன், என் குழந்தைகளுக்கு சிறுவர்மலர் அறிவூட்டியது. சிறுகதைகளுடன் நீதியையும் கூறி புரிய வைத்தேன். வரைப்படங்களுக்கு, அழகாக வண்ணம் தீட்டி மகிழ்வாள் மகள். படக்கதைகளை முயன்று படிப்பாள். சமையல் குறிப்புகளை வழிகாட்டியாக கொண்டு, சமைத்து கொடுப்பேன். திருமணத்துக்கு பின்னும் சிறுவர்மலர் புத்தகங்களை பாதுகாத்து வந்தாள் மகள். அவற்றிலிருந்து, என் பேத்திக்கு இப்போது கதைகளை கூறி மகிழ்கிறாள். தற்போது, என் மகன் வயிற்று பேரனுக்கு, கதைகளை படித்துக் கூறி, நீதியை உணர வைக்கிறேன்.குழந்தைகளின் பண்பாடு, கலாசாரம் வளர உதவி வருகிறது சிறுவர்மலர். ஒழுக்க வாழ்வுக்கு சிறந்த ஆலோசனை தரும், 'இளஸ்... மனஸ்...' பகுதி மனநிறைவை தருகிறது. அறிவியல், வரலாறு சம்பந்தப்பட்ட துல்லிய செய்திகள், அறிவை வளர்க்கின்றன. நாங்கள் ஒன்றியிருப்பது மலர் குடும்பத்தில்... அதன் பக்கங்கள் பயன் தருவதாக உள்ளன.- அ.ருக்மணி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !