உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது 51; மாற்றுத்திறனாளி. பல ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். அவற்றை சேகரித்து வைத்துள்ளேன். கால்களில் குறைபாடால் அடிக்கடி விழுந்து விடுவேன். சரியாக நிற்கவோ, நடக்கவோ முடியாது. பள்ளியில், 5ம் வகுப்பு படித்த போது, 'கவனிக்க முடியாது' என, அனுப்பி விட்டனர். படிப்பு என்றால் எனக்கு உயிர்; தவித்த நான் வீட்டிலிருந்தே முயன்று படித்து, பத்துக்கும் மேற்பட்ட பட்டங்களைப் பெற்றுள்ளேன். ஆனால், வெளி உலகை ரசிக்க வைத்தது சிறுவர்மலர் இதழ் தான்.விடாமல் படித்து, சிறுவருக்கு இலக்கியம் எழுதும் அளவு வளர்ந்து விட்டேன். சிறுவர் பாடல்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளேன்.தோழியர் யாரும் கிடையாது என்பதால், சிறுவர்மலர் இதழையே தோழியாக்கிக் கொண்டேன். மாலை வேளையில், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதியில் வரும் செய்முறைகளை பார்த்து சமைத்து மகிழ்வேன். குழந்தைகளின், 'உங்கள் பக்கம்!' பகுதி மிகவும் பிடிக்கும்.படைப்புகளை அறிமுகம் செய்வதில் தனித்தன்மை பெற்றுள்ளது சிறுவர்மலர். ரசிக்கும்படி, அழகாக வெளியிடுகிறது. வாசிக்கும் போது நம்பிக்கை தருகிறது. - ஆர்.ராஜேஸ்வரி, சென்னை.தொடர்புக்கு: 73959 51335


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !