உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 66; சிறுவர்மலர் இதழை, 30 ஆண்டுகளாக பொக்கிஷமாக கருதி, படித்து பாதுகாத்து வருகிறேன். வீட்டிற்கு வரும் சுற்றத்தினர், நண்பர்களுக்கு படிக்க தருவேன். தற்போது, 'இளஸ்... மனஸ்...' தொடர், அனைவருக்கும் உபயோகமாக உள்ளது. சுவையாக சாப்பிட புதிய உணவுகளை அறிமுகம் செய்கிறது, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி.பள்ளி வாழ்க்கையை பசுமை மாறாமல், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி நினைவுபடுத்துகிறது. இதில் வரும் அனைத்து பகுதிகளும், சிறுவர், பெரியோர் படிக்க ஏதுவாக உள்ளன.அறிவியலை அறிந்து கொள்ள, 'அதிமேதாவி அங்குராசு!' பகுதி உதவுகிறது. அறிவூட்டும் சிறுகதைகள், குழந்தைகளை மகிழ்விக்கின்றன. இந்த கடிதத்தை எழுத துாண்டியதே என் பேரன் தான். தவறாமல் தினமலர் நாளிதழை படிப்பார் என் கணவர்; எந்த ஊருக்குச் சென்றாலும் அதை தவறவிடுவதில்லை. சிறுவர்மலர் புகழ் வளர வாழ்த்துகிறேன்.- கே.விஜயா கிருஷ்ணமூர்த்தி, சென்னை.தொடர்புக்கு: 80567 80241


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !