உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 84; மிகப்பெரிய குடும்பத்தின் தலைவி. பேத்திக்கு கதை சொல்ல சிறுவர்மலர் இதழ் படிக்கத்துவங்கிய நான், அதற்கு அடிமை ஆகிவிட்டேன். இப்போது, சனிக்கிழமை விடியலுக்காக காத்திருக்கிறேன். பேத்திக்கு திருமணம் முடிந்து, அவள் பிள்ளைகளுக்கும் கதை கூறி வருகிறேன். குடும்பத்தில், சிறுவர்மலர் இதழுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், வாரந்தோறும், நான்கு இதழ்களை வாங்குகிறோம். என் குழந்தைகள் ஆரம்பித்து, பேரன், பேத்தியர், கொள்ளுப் பேரன், பேத்தியர் என, சிறுவர்மலர் இதழ் படித்தே வாழ்வை செதுக்கி கொண்டனர்.அவர்களின் மொழி உச்சரிப்பும், வார்த்தையை கையாளும் விதமும், கையெழுத்தும் மிக நன்றாக இருப்பதாக பள்ளி ஆசிரியர்களும், உற்றார், உறவினரும் பாராட்டுகின்றனர். சிறுவர்மலர் இதழ், ஸ்கூல் கேம்பஸ், சிறுகதைகள், படக்கதை, மொக்க ஜோக்ஸ், பரிசுப் போட்டி, மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன், உங்கள் பக்கத்தில் வண்ண ஓவியங்கள், தகவல்கள் அறிய அங்குராசு பக்கம் என பல்சுவையுடன் உள்ளது. இதை வாசிப்பதால் குழந்தையாக மாறி, என்றும் இளமையுடன் குதுாகலிக்கிறேன்.- ஆர்.வி.பத்மா, கிருஷ்ணகிரி.தொடர்புக்கு: 63818 01086


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !