வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 66; துறைமுகத்தில் பணி செய்கிறேன். ஒவ்வொரு நொடியும் கிடைக்கும் அனுபவங்களை ஏற்று, சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். சனிக்கிழமை என்றால், சிறுவர்மலர் இதழ் நினைவும், விடுமுறையும் இணைந்து மகிழ்ச்சி தரும். இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக சேவை, 1986 வரை பிரபலமாக இருந்தது. அதில், புதிய, பழைய சினிமா பாடல்கள் ஒலிபரப்புவர். அது மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி. திருநெல்வேலியை சேர்ந்த பல்லாயிரம் பேர் அதை ரசிப்பர். வெள்ளிக்கிழமை மாலை, 'விடுமுறை விருப்பம்' ஒலிபரப்பு துவங்கும். அதை கேட்டு மிகவும் களிப்புடன் இருந்திருக்கிறேன். அதுபோல், இப்போது சிறுவர்மலர் இதழ் கையில் கிடைத்ததும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இலங்கை வானொலியில் கேட்ட நினைவுகள் ஆக்கிரமித்து இனிய கோலங்கள் போடுகிறது. அதிமேதாவி அங்குராசு, மொக்க ஜோக்ஸ், குழந்தைகளின் ஓவிய விளையாட்டு, புள்ளிகளை இணைத்து, படம் தீட்டுதல், ஸ்கூல் கேம்பஸ் என, எல்லாம் பயன்மிக்கதாக அமைந்த பொழுதுபோக்கு. நீதிக்கதைகள் ஒவ்வொரு வாரமும், புது புது அனுபவங்களைத் தருகின்றன. உள்ளம் கவர்ந்த சிறுவர்மலர் இதழ் என்றும் வளர்க!- ராம.சொக்கலிங்கம், செங்கல்பட்டு.தொடர்புக்கு: 99691 83672