வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 83; இல்லத்தரசியாக இருக்கிறேன். அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார் என் கணவர். ஒரே மகன்; தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றி வருகிறார். கவலை தெரியாமல், ஒவ்வொரு வாரமும் மகிழ வைக்கிறது சிறுவர்மலர் இதழ். முதிர்ந்த வயதிலும், மூக்கு கண்ணாடி அணிந்து, ஆர்வமாய் அனைத்து பக்கங்களையும் படித்து வருகிறேன். பயன்மிக்கதாய் பொழுதை கழிக்கிறேன்; அதற்காகவே சிறுவர்மலர் இதழுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதழின் ஒவ்வொரு பகுதியும் சுவை மிக்கது; பயன் தரும் விதமாக அமைந்து இருக்கிறது. குழந்தைகள் முதல், பெரியோர் வரை விரும்பி படிப்பதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும், சிறுவர்மலர் இதழை வாசித்து கொண்டாடி மகிழ்கிறேன்!- ர.ஜீவா ரத்தின சபாபதி, சிதம்பரம்.தொடர்புக்கு: 99943 05081