உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 69; அண்டை நாடான பர்மாவிலிருந்து, 1964ல், என் 7ம் வயதில், திருவண்ணாமலைக்கு குடிபெயர்ந்தேன். பர்மாவில் தமிழ் மொழி கற்பிக்க பள்ளி இல்லாததால் எழுத படிக்க தெரியாது. இங்கு வந்ததும் அரசு பெண்கள் பள்ளியில் சேர்ந்தேன். படிப்பில் திணறிக் கொண்டிருந்தேன். என் பெற்றோர் உணவு விடுதி நடத்தி வந்தனர். அங்கு தினமலர் நாளிதழ் வாங்குவோம். சாப்பிட வருவோர் விரும்பி படிப்பர். அதைக் கண்டு நானும் முயற்சி செய்து வாசித்தேன். அதில் ஆர்வம் ஏற்பட்டது. பொது மற்றும் மொழி அறிவை மேம்படுத்தியது. இப்போது சிறுவர்மலர் இதழை தவறாமல் படித்து வருகிறேன். பாரம்பரிய உணவுகளை சமைக்க கற்றுத்தரும், 'மம்மீஸ் ெஹல்த் கிச்சன்!' செய்முறைகளை பின்பற்றுகிறேன். சிறுவர்மலர் இதழ் வாசிப்பு, என் வலியைப் போக்கும் மாமருந்தாக அமைகிறது. அள்ளக்குறையாத நல்ல தகவல்களை தரும் சிறுவர்மலர் மேலும் சிறப்புடன் திகழ வாழ்த்துகிறேன்!- எம்.காந்திமதி, சென்னை.தொடர்புக்கு: 95971 70266


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !