வீ டு லவ் சிறுவர் மலர்!
என் வயது 48; கோவையில் பிரபல டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். சிறுவர்மலர் இதழின் நீண்ட கால வாசகராக இருக்கிறேன். ஒவ்வொரு வாரமும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியை தவறாமல் படித்து விடுவேன். என் மனைவி, 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!' பகுதியை படித்து புதிய வகை உணவுகளை சமைக்க கற்று வருகிறார். வாரந்தோறும், 'மொக்க ஜோக்ஸ்!' பல தரப்பினரையும் சிரிக்க வைக்கிறது. தொடர்கதை, சிறுகதை என அனைத்தும் அருமையாக உள்ளன. குடும்பத்தில் அனைவரும் படித்து மகிழ்ந்து, எல்லாரிடமும் பகிரும் செய்திகள் ஏராளமாக உள்ளன. மனதில் மகிழ்ச்சியை தரும் சிறுவர்மலர் இதழுக்கு உளப்பூர்வமான வாழ்த்துகள்.- பு.செந்தில், கோவை.தொடர்புக்கு: 95666 60127