வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 82. பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். எப்போது சனிக்கிழமை வரும் என என் பேரப்பிள்ளைகள் காத்திருப்பர். சிறுவர்மலர் இதழை வாங்கி படிப்பதில் போட்டி நிலவுகிறது. அவர்களைச் சமாதானம் செய்து, சேர்ந்திருந்து படிக்கச் சொல்வேன். சிறுவர்மலர் இதழில் சிறுகதை, அறிவுரை கூறும், 'இளஸ் மனஸ்!' கேள்வி பதிலை ஆர்வமுடன் படிப்பர். என் மனைவி, 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!' படித்து அன்று மாலையே புதிய பலகாரத்தை தயாரித்து கொடுப்பார். வாரத்திற்கு ஒரு புதிய உணவு கிடைத்துவிடுகிறது. சிரித்த முகத்துடன் இருக்கும் சிறுவர், சிறுமியர் வரைந்த ஓவியங்களை, 'உங்கள் பக்கம்!' பார்த்து ரசிப்போம். அனைவரும் பொழுதை சிறப்பாக போக்கும் வகையில் கருத்துடன் அமைந்துள்ள, சிறுவர்மலர் இதழை வாழ்த்துகிறேன். - கி.சுப்புராம், தேனி. தொடர்புக்கு: 86107 84566