உள்ளூர் செய்திகள்

 வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 50. சனிக்கிழமைகளில் வாசலில் வந்து விழும், 'தினமலர்' நாளிதழ் சத்தம் கேட்டதும், செய்யும் வேலைகளை விட்டு ஓடிச்சென்று, சிறுவர்மலர் இதழை ஆவலோடு எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவேன். 'ஸ்கூல் கேம்பஸ், சுட்டீஸின் முத்து கையெழுத்து' போன்ற பகுதிகள், என் சிறு வயது நினைவுகளை அசை போட வைக்கிறது. கையை பிடித்து என் அம்மா, தமிழ் எழுத்துக்களை எனக்கு அறிமுகம் செய்த அந்த தருணங்கள், என் கண் முன் மலரும். இப்போது அவர் இந்த உலகில் இல்லை. புள்ளிகளை இணைத்து வண்ணம் தீட்டும் போது, நானும் குழந்தை பருவத்திற்கு திரும்பி மகிழ்கிறேன். வரிசை கட்டி நிற்கும் துணுக்கு செய்திகள், புதிர்களை விடுவிப்பது போன்றவை, அறிவை வளர்க்க உதவுகின்றன. 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி, வாய் விட்டு சிரிக்க வைக்கிறது. பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னை அல்லது சந்தேகங்களுக்கு, நல்ல தீர்வை கொடுக்கிறது 'இளஸ் மனஸ்!' பகுதி. சிறுவர்மலர் இதழ்களை, வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் படிப்பதற்கு ஏதுவாக, நுாலகத்தில் இருப்பது போல அடுக்கி வைத்துள்ளேன். ஓய்வாக இருக்கும் தருணங்களில், பழைய சிறுவர்மலர் இதழ்களை வாசிப்பதும் என் பழக்கம். எனக்கு மட்டுமின்றி, விருந்தினர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கும் சிறுவர்மலர் இதழுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். - து.மோகன சுந்தரி, சென்னை. தொடர்புக்கு: 94447 82671


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !