உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 49. சிவகாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தாவரவியல் துறைத்தலைவராக பணிபுரிந்து வருகிறேன். தினமலர் நாளிதழின், 35 ஆண்டுகால வாசகன். சிறு வயது முதல் சிறுவர்மலர் படித்து வருகிறேன். இதில் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, பள்ளிக்காலத்தையும், கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் நினைத்துப் பார்த்து, மகிழ வைக்கிறது. அறிவியல் கட்டுரைகள், 'இளஸ் மனஸ்' பகுதியில் இடம்பெறும் அறிவுரைகள், குழந்தைகள் நலம் காக்கும், 'மம்மீஸ் ஹெல்தி கிச்சன்' உணவுகள், மனதை மயக்கும் படக்கதைகள், 'மொக்க ஜோக்ஸ்' பகுதியில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் தமாசுகள், எல்லா குழந்தைகளும் ஓவியம் வரைவதற்கு துாண்டுதலாக உள்ள, 'மழலையர் பகுதி' என, சிறுவர்மலர் இதழில் அனைத்தும் சிறப்பாக உள்ளன. குழந்தைகள் மட்டுமல்லாது, வீட்டு பெரியவர்களும் விரும்பும் கலைப் பொக்கிஷமாக திகழும் சிறுவர்மலர் இதழுக்கு, என் மனமார்ந்த வாழ்த்துகள். - எம்.வைரமுத்து, ஸ்ரீவில்லிப்புத்துார். தொடர்புக்கு: 97504 79426


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !