என்ன கொடுமை குட்டீஸ்...!
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டா நாட்டு ராணி நமஸோலுக்கு, தாங்க முடியாத பல்வலி. சூனியக்கார மருத்துவர்களிடம், 'பல்வலி தீர என்ன செய்யலாம்' என்று ஆலோசனை கேட்டாள்.மந்திரவாதிகளாகக் கருதப்படும் அவர்கள் கூறிய வைத்தியம் என்ன தெரியுமா? 'வுமா என்னும் மாகாணத்தில் வாழும், 25 ஆயிரம் குடிமக்களையும் கொன்றால், பல்வலி தீரும்' என்றனர் அந்த மகா பாவிகள். அந்த மாகாணத்து மக்களிடம், இந்தப் பூசாரிகளுக்கு என்ன வெறுப்போ தெரியவில்லை. ராணி நமஸோல் யோசிக்கவில்லை.அவர்கள் கூறியபடி, அம்மாகாணத்திலுள்ள ஆண், பெண், குழந்தைகள், 25 ஆயிரம் பேர் அனைவரையும் விக்டோரியா ஏரிக்கு விரட்டிச் சென்று, மூழ்கடித்துச் சாகடித்தாள். இந்தப் பயங்கர வைத்தியத்தினால், ராணியின் பல்வலி குணமாக வில்லை என்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.