2025 - விளையாட்டு ஆல்பம்
நாங்க தான் 'கில்லி'கபடி உலக கோப்பை (நவ. 24, தாகா) பைனலில் சீன தைபேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய பெண்கள் அணியினர். மின்னும் சாம்பியன்சாம்பியன்ஸ் டிராபி பைனலில் (50 ஓவர், எதிர்-நியூசி., மார்ச் 9, துபாய்) வென்று, கோப்பை கைப்பற்றிய இந்திய அணியினர்.மெஸ்ஸி 'மேஜிக்'இந்தியா வந்தார் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி. இவரை காண முடியாததால், கோல்கட்டாவில் (டிச. 13) ரசிகர்கள் கலவரம். ஐதராபாத், மும்பை, டில்லி நிகழ்ச்சி சிறப்பாக நடந்தன. திவ்யா... செஸ் நிலவாசெஸ் உலக கோப்பை பைனலில் (ஜூலை 28, ஜார்ஜியா) சக வீராங்கனை ஹம்பியை வீழ்த்தி, வரலாறு படைத்தார் இந்தியாவின் திவ்யா.சபலென்கா சபதம்யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலில் (செப்.6, நியூயார்க்) அமெரிக்காவின் அனிசிமோவாவை வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்றார் பெலாரசின் சபலென்கா.நனவான கனவுதோகாவில் நடந்த டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 90.23 மீ., எறிந்து சாதனை (மே 16) படைத்தார்.'உலகம்' எங்கள் கையில்இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று வரலாறு படைத்தது (எதிர்-ஆஸி., நவ. 2, மும்பை). ஜொலிக்கும் 'ஜூனியர்ஸ்'ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில் (டிச. 10, சென்னை) இந்திய அணி, முதன் முறையாக வெண்கலம் வென்றது.