உள்ளூர் செய்திகள்

ஏப்ரல்

தமிழகம்

ஏப்.,5: அண்ணா பல்கலை துணைவேந்தராக சூரப்பா நியமனம். ஏப்.,12: சென்னையில் போர் தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கினார். *காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம். 'அழைப்பு' ஆபத்து - ஏப். 16: அலைபேசியில் மாணவிகளை தவறான பாதைக்கு 'அழைத்த' புகாரில் அருப்புக்கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலா தேவி கைது. ஏப்.,21: ரேஷன் கடையில் சிறுதானியங்களான தினை, ராகி, கம்பு, சோளத்தை மானிய விலையில் விற்க மத்திய அரசு உத்தரவு.ஏப்.,27: தாம்பரம் - நெல்லை முன்பதிவில்லா 'அந்தியோத்யா' எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்.

இந்தியா

ஏப்.,1 : உலகின் அலைபேசி தயாரிப்பில் முதலிடத்தில் சீனா. இந்தியாவுக்கு இரண்டாவது இடம். ஏப்.,3: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஷ்யா பயணம். ஏப்.,5: 1998ல் மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை. ஏப்.,6: ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியின் ஐந்து எம்.பி.,க்கள் ராஜினாமா. ஏப்.,7 : நேபாள பிரதமர் சர்மா ஒலி, இந்தியா வருகை. ஏப்.,8 : அதிகாரிகளின் கவனக்குறைவால் ஆமதாபாத் - பூரி எக்ஸ்பிரஸ் ரயில், இன்ஜின் இல்லாமல் 10 கி.மீ., துாரம் பின்னோக்கி ஓடியது. *முதன்முறையாக விவசாயி களுக்கான பிரத்யேக சமுதாய வானொலி கேரளாவில் அறிமுகம். ஏப்.,9: இமாச்சலில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 27 சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி. ஏப்.,10: 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் அதிவேக ரயில் இன்ஜினை பிரதமர் மோடி துவக்கினார். ஏப்.,15: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்பு. ஏப்.,17: அதிக பொருட் களுக்கு புவிசார் குறியீடு பெற்ற பட்டியலில் கர்நாடகா முதலிடம். ஏப்.,22: மார்க்சிஸ்ட் பொதுச்செயலராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு. *முதன் முதலாகவிமான நிலைய தீயணைப்பு வீராங்கனையாக தனியா சன்யால் நியமனம். ஏப்.,23: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரிய எதிர்க் கட்சிகளின் நோட்டீசை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிராகரித்தார். ஏப்.,24: சிறப்பு அனுமதி பெறாமல் வெளிநாட்டினர் நாகலாந்து, மிசோரம், மணிப்பூர் செல்ல மத்திய அரசு அனுமதி. வேஷம் கலைந்தது - ஏப்., 24: ராஜஸ்தானில் 2013ல் சிறுமி பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 20 ஆண்டு சிறை. 400 ஆசிரமங்கள், 50 பள்ளிகள் இவருக்கு உள்ளன. 45 ஆண்டுகளில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு அதிபதியானார். ஏப்.,26: உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 13 குழந்தைகள் பலி. ஏப்.,27: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றார். *வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வான முதல் பெண் என்ற பெருமை பெற்றார் இந்து மல்கோத்ரா. *உலக பத்திரிகை சுதந்திரம் பட்டியிலில் இந்தியாவுக்கு 138வது இடம். நார்வே முதலிடம். சாம்லிங் 'டார்லிங்' - ஏப்., 30: நீண்டகால முதல்வரானார் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் பவன் சாம்லிங் (24 ஆண்டு). 1994 டிச., 12 முதல் பதவியில் நீடிக்கிறார். மே.வங்கத்தின் மறைந்த ஜோதிபாசுவை (23 ஆண்டு, 4 மாதம்) முந்தினார்.

உலகம்

ஏப்., 2: சீனாவின் 'டியான்காங் - 1' விண்வெளி நிலையம் பசுபிக்கடலில் விழுந்தது. *துருக்கியில் முதல் அணு மின் நிலையம் திறப்பு.ஏப்., 3: ஐ.நா.,வின் அரசியல் விவகாரங்களுக்கான முதல் பெண் தலைவராக டிகார்லோ தேர்வு.ஏப்.,5: சவுதியில் 35 ஆண்டுகளுக்குப்பின் சினிமா தியேட்டர்கள் திறப்பு. ஏப்.,6: பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனா லிட்டிகா நிறுவனம் 8.7 கோடி பேரின் தனிப்பட்ட 'பேஸ்புக்' தகவல்களை திரட்டியது என பேஸ்புக் அதிர்ச்சி தகவல்.ஏப்.,8: ஹங்கேரிய பிரதமராக விக்டர் ஆர்பன் மீண்டும் தேர்வு. *உலகின் பெரிய சொகுசு கப்பலான 'சிம்பொனி ஆப் தி சீஸ்' பயணம் ஸ்பெயினில் துவக்கம். ஏப்.,9: ஆர்மேனியா அதிபராக அர்மென் சர்கிஸியான் பதவியேற்பு.ஏப்.,10: ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆண் - பெண் சம ஊதியம் வழங்கும் சட்டத்துக்கு அனுமதி.வானில் சோகம்- ஏப்., 11: அல்ஜீரியாவில் 'இல்யூஷின் II - 76' என்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. ராணுவ வீரர்கள் உட்பட 257 பேர் பலி. இது அல்ஜீரியாவில் நடந்த பெரிய விமான விபத்து.ஏப்.,12: தியாகிகள் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டு முறையை வங்கதேசம் ரத்து.ஏப்.,15: சிரியாவில் அரசு படைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுப்படை சேர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஏப்., 22: ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் தாக்குதலில் 31 பேர் பலி.ஏப்., 23: பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் - கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.எல்லை இல்லை - ஏப்., 27 : தென்கொரிய அதிபர் மூன் ஜே - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு. 1953ல் நடந்த கொரிய போருக்குப்பின் வடகொரிய அதிபர் தென்கொரிய எல்லைக்குள் வருகை தந்தது இதுவே முதல் முறை.

டாப் 3

ஏப்.,15: நிதி நெருக்கடியில் சிக்கிய 'ஏர்செல்' நிறுவனம் மூடப்படுவதாக 'டிராய்' அறிவிப்பு. 9 லட்சம் வாடிக் கையாளர்கள் பாதிப்பு. ஏப்.,19: கியூபா அதிபராக மிகுல் டயஸ் கேனல் பொறுப்பேற்பு. காஸ்ட்ரோ சகோதரர்களின் 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு. ஏப்.,22: உலகின் வயதான ஜப்பான் பெண்மணி நபி தஜிமா (117 வயது) மறைவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !