உள்ளூர் செய்திகள்

ஆகஸ்ட்

தமிழகம்ஆக., 1: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை, மீண்டும் சென்னை அண்ணா பல்கலையுடன் ஒருங்கிணைப்பு. ஆக., 8: மருத்துவப் பல்கலை மற்றும் உடற்கல்வி, விளையாட்டு பல்கலை துணை வேந்தர்களின் ஓய்வுபெறும் வயதை, 70 ஆக உயர்த்தி, ரோசய்யா உத்தரவு. ஆக., 11: கொங்குநாடு முன்னேற்றக்க கழக செயலர் ஈஸ்வரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக, அதன் தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவிப்பு.ஆக., 12: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு நடந்தது. முன்கூட்டியே வினாத்தாள் வெளியானதால் தேர்வு ரத்து. * சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், இலங்கை தமிழர்களுக்காக 'டெசோ' மாநாடு நடந்தது. ஆக., 17: தி.மு.க., தலைவர் கருணாநிதி, பேஸ்புக்கில் நுழைந்தார். ஒரேநாளில் எதிர்பாளர்களின் விமர்சனங்களால், கணக்கு மூடப்பட்டது. மீண்டும் திறப்பு.ஆக., 31: முன்னாள் எம்.எல்.ஏ., வெள்ளைச்சாமி கமுதியில் கொலை செய்யப்பட்டார்.

இந்தியா

ஆக., 1: புனேயில் ஐந்து இடங்களில் லேசான தொடர் குண்டுவெடிப்பு.ஆக., 9: டில்லியில், முன்னாள் விமானப் பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய, அரியானா மாநில முன்னாள் அமைச்சர் கோபால் கந்தா கைது.* இரண்டு ஆயிரம் கி.மீ., தூரம் வரை சென்று தாக்கும் அக்னி - 2 ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.ஆக., 19: காதலை பிரித்த எஸ்.ஐ.,யை பழிவாங்க எண்ணி, ஆந்திராவின் தடா பகுதியில் ஓடும் பஸ்சில் மூவரை கொலை செய்த 'சைக்கோ' கொலையாளி ஆந்திர போலீசாரால் கைது.ஆக., 21: ராஜ்யசபா துணைத் தலைவராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜெ.குரியன், ஏகமனதாகத் தேர்வு. * நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீட்டில், 1.86 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக பார்லிமென்டில் மத்திய தணிக்கை துறை அறிக்கை.* உத்தரகண்டில் அரசு வேலையில் சேருவதற்கான அதிகபட்ச வயதை 35லிருந்து 40 ஆக உயர்த்தியது.ஆக., 24: ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பி.ஏ., சங்மா, 'தேசிய மக்கள் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கினார்.ஆக., 29: 2008 நவ., 26, மும்பை தாக்குதல் சம்பவத்தை மீடியாக்கள் நேரடியாக ஒளிபரப்பியது, முற்றிலும் தவறு மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு.

உலகம்ஆக., 10: சிரியாவின் சுகாதார அமைச்சர் நதீர் அல் ஹால்குய், புதிய பிரதமராக நியமனம்.ஆக., 16: காங்கோவில், தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கி 100 மீட்டர் ஆழத்தில், வேலை செய்து கொண்டிருந்த 60 தொழிலாளர்கள் பலி.ஆக., 19 : சூடான் நாட்டு விமானம், மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு அமைச்சர் உட்பட 31 பேர் பலி.ஆக., 28: அணு ஆயுதங்களை சுமந்து 14 ஆயிரம் கி.மீ., தூரம் வரை சென்று தாக்கும், 'டாங்பெங்-41' என்ற ஏவுகணையை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது.ஆக., 28: 'டோங்பெங்-41' என்ற 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதித்தது.

விளையாட்டு

ஆக., 1: லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டனில் 'மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட்ட சீனா, தென் கொரியாவின் 8 வீராங்கனைகள் தகுதி நீக்கம்.* ஒலிம்பிக் பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் காஷ்யப். ஆக., 2: லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற்ற அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் (22), அதிக பதக்கம் வென்ற ரஷ்ய'ஜிம்னாஸ்டிக்' வீராங்கனை லாரிசா சாதனையை (18) முறியடித்தார். ஆக., 26: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆக., 29: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விஜய் குமார் (துப்பாக்கி சுடுதல்), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்) இருவரும், 'கேல் ரத்னா' விருது பெற்றனர்.* டெஸ்ட், 'டுவென்டி-20', ஒருநாள் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 'நம்பர்-1' இடத்தை பெற்றது தென் ஆப்ரிக்கா.* இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்டிராஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !