உள்ளூர் செய்திகள்

ஆகஸ்ட்

**********************தமிழகம்**********************ஆக., 2: தி.மு.க., பொதுக்கூட்டம்: செப்.14ல் அ.தி.மு.க., கோவையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, ஆக., 2ல் தி.மு.க.,வின் பொதுக்கூட்டம் மு.கருணாநிதி தலைமையில் நடந்தது. * கோவை 'டைடல் பார்க்': தகவல் தொழில்நுட்ப துறையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் கோவையில் 380 கோடி ரூபாய் மதிப்பில் தகவல் தொழில் நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைக்கப்பட்டது. இதனை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.ஆக., 8: நெல்லை பல்கலை துணைவேந்தர் காளியப்பன், தி.மு.க., எம்.எல்.ஏ., மாலை ராஜாவால் தாக்கப்பட்டார்.ஆக., 14: சிவகாசியில் விதிமுறை மீறி செயல்பட்டு வந்த பட்டாசுக் கடையை அழித்த போது வெடி வெடித்து அரசு அதிகாரிகள் 8 பேர் பலி.ஆக., 15: விவசாயிகளுக்கு இலவசமாக பம்பு செட் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு.ஆக., 18: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான மூன்றாம் கட்ட ஆய்வு துவக்கம்.ஆக., 23: பள்ளிப்படிப்பை முடிக்காமல் நேரடியாக முதுகலை பட்டம் பெற்றால் செல்லாது என தமிழக அரசு அறிவிப்பு.ஆக., 25: திருப்பூர் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தி.மு.க., வில் இணைந்தார்.ஆக., 30: கடந்த 2000ம் ஆண்டு தர்மபுரி அருகே பஸ்சில் இருந்த மாணவியர் மூன்று பேரை எரித்து கொன்ற 3 பேருக்கு தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.ஆக., 31: தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த ஸ்ரீபதி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை செயலராக மாலதி பொறுப்பேற்பு.* தலைமை தகவல் கமிஷனராக இருந்த ராமகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து அவருக்கு பதிலாக ஸ்ரீபதி பதவியேற்பு.*****************************************************இந்தியா*****************************************************ஆக.,1: மலையாள மனோரமா பத்திரிகை முதன்மை ஆசிரியர் மேத்யூ மரணம்.ஆக., 6: காஷ்மீரில் லே பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 140க்கும் மேற்பட்டோர் பலி.ஆக., 7: கடல் சூழல் பாதிப்பு: மும்பை துறைமுகத்திலிருந்து 5 கி.மீ., தொலைவில் நடுக்கடலில் எம்.எஸ்.சி சித்ரா மற்றும் கலிஜியா-3 என்ற இரண்டு சரக்கு கப்பல்கள் எதிர்பாராத விதமாக மோதின. இதனையடுத்து அந்த கப்பல்களில் சிக்கி தவித்த 33 ஊழியர்கள் கடலோர காவல்படை கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். விபத்தில் ஒரு கப்பலில் இருந்த எண்ணெய் கண்டெய்னர்கள் கடலில் கவிழ்ந்தன. மும்பை கடற்கரை பகுதி முழுவதும் இந்த எண்ணெய் படலம் பரவியது. கடல்வாழ் உயிரினங்களின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.ஆக., 11: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.ஆக., 17: பெங்களூருவில் 2008ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கேரளாவின் மக்கள் ஜன நாயகக் கட்சி தலைவர் மதானி கைது.ஆக., 18: சிறந்த எம்.பி.,க்கான விருது பா.ஜ., எம்.பி., முரளி மனோகர் ஜோஷி, காங்., எம்.பி., பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மற்றும் மோகன் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.ஆக., 21: எம்.பி.,க்களின் சம்பளம் மூன்று மடங்காக உயர்த்த பார்லிமென்ட் ஒப்புதல்.ஆக., 22: முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூர் - சுனந்தா திருமணம் பாலக்காட்டில் நடந்தது. இது தரூரின் 3வது திருமணம். ஆக., 25: அமெரிக்காவுடனான அணு சக்தி இழப்பீடு தொடர்பான மசோதா பார்லிமென்டில் தாக்கல். ஆக., 24: இந்திய தேர்தல் ஆணையராக ஹரிசங்கர் பிரம்மா நியமனம்.* அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகங் அபாங், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் கைது. ஆக., 26: ஒரே நாளில் 111 வழக்குகளில் தீர்ப்பு கூறி, ஆந்திர நீதிபதி சத்ய நாராயண மூர்த்தி தேசிய சாதனை.ஷூ வீச்சு: காஷ்மீரில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவின் போது, மாநில முதல்வர் உமர் அப்துல்லா மீது ஷூ வீசப்பட்டது. அப்துல் அஹாத் ஜான் என்ற காவல்துறை அதிகாரி ஒருவரே இச்சம்பத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட இவர் முன்னாள் சப் - இன்ஸ் பெக்டர். இவரது பதவி பறிக்கப்பட்டதே ஷூ வீச்சுக்கு காரணம் என தெரிய வந்தது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் புஷ் மீதும் இந்திய தலைவர்கள் மீதும் ஷூ வீச்சு சம்பவங்கள் நடந்தன.*****************************************************உலகம்*****************************************************ஆக., 1: ஆப்கானிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த ராணுவத்தை நெதர்லாந்து திரும்ப பெற்றது. * கோலாகலம்: அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தம்பதியரின் மகள் செல்சியா - மார்க் மெஷ்வின்ஸ்கி திருமணம் ஆக., 1ல் நடந்தது.ஆக. 5: ஈரான் அதிபர் அகமதி நிஜாத் சென்ற பாதுகாப்பு வாகனத்தின் அருகே குண்டு வெடித்ததில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.ஆக., 14: இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் பதக்கத்தை பறிப்பதற்கு, அதிபர் ராஜபக்ஷே ஒப்புதல்.ஆக., 19: வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட பாக்., கிற்கு, இந்தியா 25 கோடி ரூபாய் நிதி உதவி.ஆக., 21: ஆஸ்திரேலியாவில் நடந்த பிரதமர் தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆக., 22: பிலிப்பைன்சில் முன்னாள் போலீஸ் ஒருவர் ஹாங்காங் சுற்றுலா பயணிகள் பஸ்சை பினையமாக பிடித்து சுட்டதில் 8 பேர் பலி.ஆக., 30: இந்தோனேசியாவில் 400 ஆண்டுகளுக்கு பின் எரிமலை சீற்றம் ஏற்பட்டது.* பாகிஸ்தான் சிறைகளில் சட்ட விரோதமாக சிறை வைக்கப்பட்டிருந்த 100 மீனவர்கள் விடுதலை .ஆக., 31:முடிந்தது போர்: ஈராக் அணு ஆயுத உற்பத்தியை அதிகப்படுத்தியது. இதனை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் ஈராக் செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து கடந்த 2003ல் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இறுதியில் அங்கு அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டன. சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். 7 ஆண்டுகளாக ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெறப் படுவதாக அதிபர் ஒபாமா அறிவித்தார்.*****************************************************விளையாட்டு*****************************************************ஆக. 7: இலங்கை அணிக்கு எதிராக கொழும்புவில் நடந்த 3வது டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி, தொடரை 1-1 என சமன் செய்தது.ஆக. 8: சந்தோஷ் கால்பந்து தொடரின் பைனலில், பஞ்சாப் அணியை வீழ்த்திய பெங்கால் அணி 30வது முறையாக கோப்பை வென்றது.* தங்க மங்கை: ஜெர்மனியில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் தேஜஸ்வனி சாவந்த் தங்கம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.ஆக. 14: சிங்கப்பூரில் இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி துவங்கியது.ஆக. 21: இளைஞர்களுக்கான ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஆக. 28: முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி, கோப்பை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !