சினிமா 2018
பிரபல திருமணங்கள்* முன்னாள் உலக அழகி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா - அமெரிக்க பாடகர் நிக் ஜோனாசை காதல் திருமணம் செய்தார். பிரியங்காவை விட ஜோன்ஸ் 10 வயது இளையவர். ராஜஸ்தானின் ஜோத்பூர் அரண்மனையில் திருமணம் நடந்தது. * பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் நடந்தது. பத்மாவதி, ராம் லீலா, பஜிரோ மஸ்தானி ஆகிய பாலிவுட் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். * நடிகைகள் பாவனா, ஸ்ரேயா, இஷாரா, சமஸ்கிருதி, மேக்னா ராஜ், சுஜா, சாந்தினி ஆகியோருக்கு திருமணமானது. பார்த்திபன் மகள் கீர்த்தனா, பின்னணி பாடகிகள் மானசி, வைக்கம் விஜயலட்சுமி, நடிகர்கள் அசோக், ராம்தாஸ், மிலிந்த் சோப்ரா, ரமேஷ் திலக், சவுந்தர்ராஜா ஆகியோருக்கு திருமணம் நடந்தது.சாதனையும்... சோதனையும்தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு 2018ம் ஆண்டை பொறுத்தவரை புதுமையான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். ரஜினி நடித்த இரண்டு படங்கள், கமலின், 'விஸ்வரூபம் - 2' உள்பட, 180க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாயின. இதில் 'பரியேறும் பெருமாள், 96, காலா, சர்கார், 2.0, நடிகையர் திலகம், மேற்கு தொடர்ச்சி மலை, ராட்சசன், காற்றின்மொழி' உள்ளிட்ட படங்கள் வசூல் மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன. மேலும், 'பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை' உள்ளிட்ட படங்கள். உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.சோதனை காலம்தமிழ் ரசிகர்களுக்கு நல்ல தமிழ் படங்களை பார்த்த திருப்தி இருந்தாலும் தயாரிப்பாளர் களுக்கும், உச்ச நடிகர்களுக்கும் இந்தாண்டு சோதனை ஆண்டாகவே இருந்தது. ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாவதும், இதனால் தியேட்டர் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை பல முறை ஒத்தி வைப்பதுமாக, 2018 தயாரிப்பாளர் களுக்கு பல பாடங்களை கற்று தந்துள்ளது. அதர்வாவின் 'செம போத ஆகாத', 'இமைக்கா நொடிகள்' - விஷ்ணு விஷாலின், 'ராட்சசன்' - ஜெயம்ரவியின், 'அடங்கமறு' உள்ளிட்ட படங்கள் ஒத்தி வைக்கப்பட்டு ரிலீஸ் ஆகின.'சண்டக்கோழி' விஷால்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் மீது அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 50 உறுப்பினர்கள் முறைகேடு புகார் தெரிவித்தனர். பின் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை பூட்டினர். அலுவலகத்தை திறக்க, விஷால் ஆதரவாளர்களுடன் சென்றார். அனுமதி மறுத்த போலீசார் விஷாலை கைது செய்து பின் விடுவித்தனர். பிரச்னை முடியும் வரை தமிழக அரசு சங்கத்துக்கு 'சீல்' வைத்தது. விஷால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சங்க அலுவலக 'சீலை' அகற்ற கோர்ட் உத்தரவிட்டது.உதிர்ந்த திரைப்பிரபலங்கள்சுராங்கனி புகழ் சிலோன் மனோகர், பழம் பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி, நடிகை ஸ்ரீதேவி, நடிகர்கள் தேசிங்கு ராஜா, நீலு, ராக்கெட் ராமநாதன், வெள்ளை சுப்பையா, கோவை செந்தில், பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், உள்ளிட்ட பிரபலங்கள் மறைந்தனர். கதை திருட்டுபுதிதாக, 2018ல் வெளியான, '96, சர்கார், 2.0, திமிரு புடிச்சவன்' போன்ற படங்களின் கதையில் சர்ச்சை உருவானது. தாம் எழுதிய கதையை திருடி எடுத்து விட்டார்கள் என, இயக்குனர்கள், ஏ.ஆர்.முருகதாஸ், கணேசா, பிரேம்குமார், ஷங்கர் ஆகியோர் மீது, குற்றம் சாட்டப்பட்டது. இதில் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் காரசார அறிக்கை வெளியிட்டனர். கதை திருட்டு விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.வசூலில் சாதனை உலகளவில் வசூலில் முதலிடம் பிடித்த திரைப்படம் 'அவெஞ்சர் - இன்பினிட்டி வார்'. அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகமான 'இன்பினிட்டி வார்', 2018 ஏப்., 27ல் உலகம் முழுவதும் வெளியானது. அயர்ன் மேன், ஹல்க், தோர், பிளாக் விடோ, விஷன், ஸ்கேர்லட் விட்ச், பிளாக் பேந்தர், ஸ்பைடர்மேன் உள்ளிட்ட முப்பது சூப்பர் ஹீரோக்கள் நடித்துள்ளனர். வெளியான 11 நாட்களில் உலகளவில் ரூ. 7000 கோடியும், இந்தியாவில் ரூ. 246 கோடியும் வசூலானது. மொத்த்தில் ரூ. 14,000 கோடி வசூலானது.ஏமாற்றம் தந்த படம்கமலின் 'விஸ்வரூபம் - 2', சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', சிவகார்த்திகேயனின் 'சீமராஜா', விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' போன்ற படங்கள் எதிர்பார்ப்போடு வெளியாயின. ரசிகர்களை திருப்திபடுத்தாதால் தோல்வி.அதிர வைத்த 'மீ டூ''நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் படுக்கையை பகிர்ந்தால் முடியும்' என பாலிவுட்டில் துவங்கிய குற்றச்சாட்டு தென்னிந்திய திரையுலகிலும் தலை துாக்கியது. இதற்காக டுவிட்டரில் துவக்கப்பட்ட 'மீ டூ' ஹேஸ்டேக்கில் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான கொடுமைகளை விவரித்தனர். ஆந்திர நடிகை ஸ்ரீரெட்டி, இயக்குனர் ராகவா லாரன்ஸ் மீது புகார் தெரிவித்தார். மீ டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுசிகணேசன், நடிகர்கள் ஸ்ரீகாந்த் அர்ஜூன் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன. பின்னணி பாடகி சின்மயி, அமலாபால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் 'மீ டூ' புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.கோடிகளில் நயன்தாரா'நானும் ரவுடிதான்' படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் சென்றது. தென்னிந்திய நடிகைகளில் ரூ.ஆறு கோடி சம்பளம் வாங்கும் முதல் நடிகை நயன்தாரா. இவர் 2018ல் நடித்த 'கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்' படங்கள் வெளியாகின. மேலும் அஜித்துடன் நடித்த, 'விஸ்வாசம்' படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனை 2019ல் திருமணம் செய்வார்.ராயல்டி தகராறுஇசையமைப்பாளர் இளையராஜா, 'தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பாடக்கூடாது' என உத்தரவிட்டார். 'பணம் பெற்று நான் இசையமைத்த பாடலை பாடுபவர்கள் எனக்கான பங்கை தர வேண்டும்' என அவர் கூறியது சர்ச்சையானது.வரலாற்று பட ஆர்வம்மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான, 'நடிகையர் திலகம்' படத்தில், சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் தெலுங்கிலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்திய திரையுலகமே போற்றும் வகையில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக வாழ்ந்திருந்தார். இதனால் வரலாற்று படங்கள் மீது பல நடிகைகளுக்கு ஆர்வம் அதிகமானது. அதேபோல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதாக நான்கு பேர் போட்டி போட்டனர். பெண் இயக்குனர் ப்ரியதர்ஷினி, 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில், ஜெ., வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கிறார். இதில் ஜெ.,வாக நித்யா மேனன் நடிக்கிறார்.