உள்ளூர் செய்திகள்

விளையாட்டு

ஜனவரி

ஜன., 15: பிரிமியர் பாட்மின்டன் லீக் தொடரில் ஐதராபாத் அணி சாம்பியன்.ஜன., 24: தேசிய சீனியர் கூடைப்பந்து தொடரில் தமிழக அணிக்கு கோப்பை.ஜன., 27: ஆஸ்தி ரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி சாம்பியன்.ஜன., 28: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன்.ஜன., 28: இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டனில் இந்திய வீராங்கனை செய்னா வெள்ளி.

பிப்ரவரி

பிப்., 3: உலக கோப்பை கிரிக்கெட்டில் (19 வயது) இந்தியா 4வது முறையாக சாம்பியன்.பிப்., 7: ஒருநாள் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனையானார் இந்தியா வின் ஜுலான் கோஸ்வாமி.பிப்., 16: தென் ஆப்ரிக்கா வுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5-1 என கைப்பற்றியது.பிப்., 24: தென் ஆப்ரிக்கா வுக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்தியா 2-1 என வென்றது.பிப்., 25: தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் உட்பட 39 பதக்கங்களுடன் நார்வே அணி முதலிடம்.

மார்ச்

மார்ச் 5: மெக்சிகோவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாகர் ( 10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம்.* ரஷ்யாவில் நடந்த 'டால் மெமோரியல்' செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வ நாதன் ஆனந்த் சாம்பியன்.மார்ச் 6: தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் 100 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் தங்கம்.'சபாஷ்' சென்னை - மார்ச் 17: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரில் சென்னை அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது. மார்ச் 19: கொழும்புவில் நடந்த முத்தரப்பு 'டுவென்டி-20' பைனலில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பை வென்றது.மார்ச் 19: சிங்கப்பூரில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் விதர்வால் காடே (50 மீ., 'பிரீஸ்டைல்') தங்கம்.மார்ச் 22: சிட்னியில் நடந்த உலக கோப்பை ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் ( 10 மீ., 'ஏர் ரைபிள்') தங்கம்.மார்ச் 28: கேப்டவுன் டெஸ்டில் பந்தை சேதப் படுத்திய பிரச்னையில் ஆஸ்தி ரேலியாவின் பான்கிராப்டிற்கு 9 மாதங்கள், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

ஏப்ரல்

ஏப்., 2: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பத்ம பூஷன் விருது வென்ற 10வது கிரிக்கெட் வீரரானார். விழாவுக்கு கர்னல் உடையில் வந்த இவருக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் விருது வழங்கினார்.கண்கவர் விழா - ஏப்., 4: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு ஆரம்பம். கண்கவர் வானவேடிக்கையுடன் துவக்க விழா நடந்தது.ஏப்., 5-7: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு, சஞ்சிதா சானு, சதீஷ் குமார், ராகுல் வெங்கட் தங்கம்.ஏப்., 9-11: காமன்வெல்த் விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஜித்து ராய், ஹீனா சித்து, ஸ்ரேயாசி, அனிஷ் பன்வாலா தங்கம்.பலே பயஸ்ஏப்., 7: டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகள் (43) பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார் இந்தியாவின் பயஸ். இவர் இத்தாலியின் நிகோலா பீட்ராங்கெலியை (42 வெற்றி) சாதனையை முறியடித்தார்.ஏப்., 12: காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் (74 கி.கி.,) தங்கம். ஏப்., 14: காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் மேரி கோம் (குத்துச்சண்டை), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) தங்கம்.ஏப்., 15: காமன்வெல்த் விளையாட்டில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என, மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 3வது இடம்.

மே

மே 14: ஜெர்மனியில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம்.மே 20: தென் கொரியாவில் நடந்த பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியா வெள்ளி.மே 23: தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.மே 27: ஐரோப்பிய சாம்பி யன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்மே 30: இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா ஓய்வு.

ஜூன்

ஜூன் 8: பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் 'பாலி உம்ரிகர்' விருதை இந்திய அணி கேப்டன் கோஹ்லி பெற்றார்.ஜூன் 9: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் சாம்பியன்.ஜூன் 10: 'இன்டர்கான்டி னென்டல்' கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா சாம்பியன்.'கிராண்ட் மாஸ்டர்' - ஜூன் 24: கிரெடின் செஸ் தொடரில் சென்னையின் பிரக்னநந்தா இளம் வயதில் (12 ஆண்டு, 10 மாதம், 13 நாள்) 'கிராண்ட் மாஸ்டர்' ஆன முதல் இந்தியர் ஆனார்.ஜூன் 25: அமெரிக்கா உலக கோப்பை வில்வித்தை 'ரிகர்வ்' பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம்.

ஜூலை

ஜூலை 8: இங்கிலாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. * சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் 50 'கேட்ச்', ஒரே போட்டியில் 5 'கேட்ச்' செய்த முதல் விக்கெட் கீப்பர் ஆனார் இந்தியாவின் தோனி. ஜூலை 11: உலக தட களத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் ஹிமா தாஸ் (400 மீ.,). ஜூலை 12: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையரில் ஜெர்மனி வீராங்கனை கெர்பர் சாம்பியன்.ஜூலை 15: விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையரில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன்.ஜூலை 29: ரஷ்ய ஓபன் பாட்மின்டனில் இந்திய வீரர் சவுரப் வர்மா சாம்பியன். ஜூலை 31: இங்கிலாந்து தனது ஆயிரமாவது டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக பங்கேற்றது.

ஆகஸ்ட்

ஆக., 5: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார் இந்தியாவின் சிந்து.'சிங்கம்' பஜ்ரங் - ஆக., 19: ஆசிய மல்யுத்தம் பைனலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஜப்பானின் டைசியை 10-8 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். 2014ல் வெள்ளி கைப்பற்றிய இவருக்கு இது 2வது பதக்கமாக அமைந்தது. ஆக., 18: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (15 வயது) தொடரில் இளம் இந்திய பெண்கள் அணி சாம்பியன். ஆக., 21: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் 16 வயதில் தங்கம் வென்றார் சவுரப் சவுத்ரி. * ஆசிய வரலாற்றில் 'செபக் தக்ரா' போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது.ஆக., 22: ஆசிய ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி 26-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. ஆக., 23: ஆசிய கபடி ஆண்கள் பிரிவில் இந்தியா வெண்கலம். ஆக., 24: ஆசிய பெண்கள் பிரிவில் இந்தியா வெள்ளி.* ஆசிய டென்னிஸ் ஆண்கள் ஒற்றையரில் தமிழகத்தின் குன்னேஸ் வரன் வெண்கலம்.ஆக., 25: இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் ஆசிய சாதனையுடன் குண்டு எறிதலில் தங்கம் வென்றார். தமிழக 'தங்கம்' - ஆக., 27: ஆசிய விளையாட்டு 400 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் தருண் அய்யாச்சாமி (48.46 வினாடி) வெள்ளி வென்றார். இந்த ஓட்டத்தில் 49 வினாடிக்கும் குறைவாக ஓடிய முதல் இந்தியர் ஆனார்.ஆக., 28: ஆசிய பாட் மின்டனில் இந்தியாவின் சிந்து வெள்ளி. 'சூப்பர்' சுவப்னா - ஆக., 29: ஆசிய விளையாட்டில் உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 100, 200 மீ., உள்ளிட்ட 7 விளையாட்டுகள் கொண்ட 'ஹெப்டத்லான்' போட்டியில் இந்தியாவின் சுவப்னா பர்மன் தங்கம் கைப்பற்றினார்.

செப்டம்பர்

செப்., 1: ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கியில் இந்தியா வெண்கலம்.செப்., 2: சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா தொடரை 1-3 என இழந்தது.* ஆசிய விளையாட்டில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என அதிக பதக்கம் (69) வென்றது. ஓஹோ ஒசாகா - செப்., 9: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் அமெரிக்காவின் செரினாவை ஜப்பானின் ஒசாகா வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றார். செப்., 10: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ஜோகோவிச் சாம்பியன்.செப்., 12: தெற்காசிய கால்பந்து தொடர் அரையிறுதி யில் இந்தியா 3-1 என பாகிஸ்தானை வென்றது. செப்., 20: விஜய் ஹசாரே டிராபி, ஜார்க்கண்ட் வீரர் நதீம் 8 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை. செப்., 24: செர்பியா, ஜூனியர் டேபிள் டென்னிசில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்.

அக்டோபர்

அக்., 6: உலக ஸ்னுாக்கர் (16 வயது) சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் கீர்த்தனா சாம்பியன். அக்., 9: 'யூத்' ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஜெரிமி தங்கம். அக்., 11: ஆசிய பாரா உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் வெண்கலம்.அக்., 15: யூத் ஒலிம்பிக் ஹாக்கியில் முதன் முறையாக இந்தியா 2 வெள்ளி வென்றது. அக்., 27: உலக பில்லியர்ட்ஸ் தொடரில் இந்திய வீரர் சவுரவ் கோத்தாரி சாம்பியன்.

நவம்பர்

நவ., 1: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா (3-1) வென்றது. நவ., 11: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்தியா (3-0) வென்றது.நவ., 18: சீனதைபே ஓபன் டென்னிசில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, கர்மன் கவுர் தண்டி ஜோடி சாம்பியன். நவ., 25: ஆஸ்திரேலியா வுக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்தியா 'டிரா' (1-1) செய்தது. செஸ் 'கிங்' - நவ., 29: உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நார்வேயின் கார்ல்சன் அமெரிக்காவின் காருணா மோதினர். 12 சுற்றும் 'டிரா' ஆக, 'டைபிரேக்கரில்' கார்ல்சன் சாதித்தார். தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் ஆனார்.

டிசம்பர்

டிச., 3: யூத் செஸ் ஒலிம்பியாட்டில் இளம் இந்தியா வெள்ளி.டிச., 4: இந்திய அணி துவக்க வீரர் காம்பிர் ஓய்வு.* சிறந்த கால்பந்து வீரருக் கான 'பாலன் டி ஆர்' விருது வென்றார் லுகா மாட்ரிச் (குரோஷியா). டிச., 10: அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி. டிச., 14: இந்திய பாட்மின்டன் ஜோடி காஷ்யப், செய்னா நேவல் திருமணம்.டிச., 30: மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 137 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாப் 3

ஜன., 1: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணி முதன்முறையாக சாம்பியன். பைனலில் டில்லி அணியை வீழ்த்தியது.ஜன., 8: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-0 எனக் கைப்பற்றியது.ஜூன் 10: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ஸ்பெயினின் நடால் 11வது முறையாக சாம்பியன். பைனலில் ஆஸ்திரியாவின் தியமை வீழ்த்தினார்.ஆக., 12: டி.என்.பி.எல்., தொடரில் மதுரை அணி முதன் முறையாக கோப்பை வென்றது. பைனலில் திண்டுக்கல் அணியை 7 விக்கெட்டில் வீழ்த்தியது.ஜூலை 27: உலக வில்வித்தை தரவரிசையில் ('ரேங்க்') முதன் முறையாக இந்தியா 'நம்பர்-1' இடம் பிடித்து வரலாறு படைத்தது.நவ., 15: மியான்மர், உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி கோப்பை வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !