உள்ளூர் செய்திகள்

ஜூலை

*********************தமிழகம்*********************ஜூலை 8: தமிழகத்தில் புதிதாக 42 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி.ஜூலை 10: முதன்முறையாக விடுமுறை நாட்களிலும் வழக்குகளை விசாரிக்கும் குடும்ப நல கோர்ட்கள் சென்னையில் துவக்கம்.ஜூலை 12: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டடைரக்டர் சீமானுக்கு ஒரு வருட சிறை தண்டனை.* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி அக்கட்சியி லிருந்து நீக்கம்.ஜூலை 23: ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் இடைக்கால பணிநீக்கம்.ஜூலை 25: குளச்சல் தொகுதி காங்., எம்.எல்.ஏ., ஜெயபால் மரணம்.ஜூலை 27: திருவாரூர் மருத்துவக் கல்லூரியை, முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.ஜூலை 30: தமிழகத்தில் ம.தி.மு.க., வும், புதுச்சேரியில் பா.ம.க.,வும், மாநில கட்சி அந்தஸ்தை இழந்தன.* நாட்டில் முதன் முறையாக அர்ஜுன் பீரங்கியின், நகல் சாதன பயிற்சி மையம், சென்னை ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன வளாகத்தில் துவக்கம்.ஜூலை 31: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பிரவீன் குமார் புதிய அதிகாரியாக பொறுப்பேற்பு. * சென்னை அருகே மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கருணாநிதி துவக்கி வைத்தார்.* மதுரையில் காங்., சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது.*****************************************************இந்தியா*****************************************************ஜூலை 1: அமர்நாத் புனித யாத்திரை துவங்கியது.ஜூலை 5: பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து, எதிர்க்கட்சிகள்சார்பில் நாடு தழுவிய பந்த்.ஜூலை 6: ஸ்ரீநகரின் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொலை.ஜூலை 7: பஞ்சாப்பில் உள்ள பாட்டியாலா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 15 பேருக்கு மேல் பலி.ஜூலை 8: மறைந்த முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகனும், காங்., எம்.பி., யுமான ஜெகன்மோகன் ரெட்டி,கட்சி உத்தரவை மீறி யாத்திரை.ஜூலை12: இஸ்ரோ சாதனை : 'பி.எஸ்.எல்.வி., - சி 15' ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது இஸ்ரோ தொடர்ந்து வெற்றிகரமாக அனுப்பிய 17வது ராக்கெட். இந்த ராக்கெட்டில், கார்ட்டோசாட் 2பி செயற்கைகோள், ஆந்திர, கர்நாடக மாணவர்கள் தயாரித்த ஸ்டட்டாட் செயற்கைகோள் மற்றும் அல்ஜீரியா, கனடா, சுவிஸ் நாடுகளில் தயாரிக்கப்பட்ட அல்சாட் - 2ஏ, ஐசாட் - 1, டிசாட் - 1 ஆகிய செயற்கைகோள்கள் உள்ளிட்ட ஐந்து செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.ஜூலை12: ரூபாய் குறியீடு: அமெரிக்கா, பிரிட்டன் நாடு களைப் போல, இந்தியாவும் ரூபாய்க்கான புதிய குறியீட்டை ஜூலை 15ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதற்காக தேசிய அளவில் வடிவமைப்பு போட்டியை ரிசர்வ் வங்கி நடத்தியது. தமிழகத்தை சேர்ந்த ஐ.ஐ.டி., மாணவர் உதயகுமார் உருவாக்கிய ரூபாய் குறி யீடு தேர்வானது.ஜூலை 17: மகாராஷ்டிராவில் கட்டப் படும் பேஜ்புரி அணையை பார்வை யிடுவதற்கு, தொண்டர்களுடன் சென்ற தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு கைது.ஜூலை 19: தொடரும் ரயில் விபத்துகள்: மேற்குவங்க பிர்பும் அருகே சைந்தியா ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது உத்தர்கண்டா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 67 பயணிகள் பலியாகினர்.ஜூலை 25: குஜராத்தில் போலி என்கவுன்டர் வழக்கில், அம்மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா சி.பி.ஐ., போலீசாரால் கைது.ஜூலை 28: முதல் சுற்றுப்பயணம்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பதவியேற்ற 2 மாதத்திற்கு பிறகு இந்தியா வந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.ஜூலை 29: ஜார்க்கண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு, பார்லிமென்டின் இரு அவைகளும் ஒப்புதல்.ஜூலை 30: ஆந்திராவில் தெலுங்கானாவில் நடந்த 11 தொகுதிக்கான இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ்., கட்சி 10 இடங்களில் வெற்றி.* தலைமை தேர்தல் கமிஷனர்: தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் கமிஷனராக அரியானாவைச் சேர்ந்த எஸ்.ஒய்.குரேஷி, ஜூலை 30ல் பொறுப்பேற்றார். இதற்கு முன் இருந்த நவீன் சாவ்லாவின் பதவி முடிந்ததையடுத்து இவர் தேர்வு செய்யப்பட்டார். 2006ம் ஆண்டு முதல் தேர்தல் கமிஷனராக இருந்து வந்தார்.ஜூலை 31: காஷ்மீரில் வன்முறைக் கும்பலுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இம்மாதம் முழுவதும் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்டோர் பலி.*****************************************************உலகம்*****************************************************ஜூலை 6: ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறும் இலங்கை அகதிகளுக்கான தடை நீக்கம்.* ஜூலை : இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை ஐ.நா. நியமித்தது.ஜூலை 7: பெட்ரோல் இல்லாமல் சூரிய ஒளி மூலம் இரவு நேரத்திலும் பறக்கும் விமானம், சுவிட்சர்லாந்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.ஜூலை 12: உகாண்டாவில் உலக கோப்பை கால்பந்து போட்டியை, ரசிகர்கள் பார்த்து கொண்டிருந்த இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததில், 64 பேர் பலி.ஜூலை 15: பேச்சுவார்த்தை: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜூலை 15ல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரோஷியை சந்தித்தார். பின் அந்நாட்டு அதிபர் சர்தாரி மற்றும் பிரதமர் யூசுப் ராஜா கிலானியையும் கிருஷ்ணா சந்தித்து பேசினார். 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இச் சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தையின் போது பாக்., அமைச்சர் குரோஷி, கிருஷ்ணாவையும், இந்தியாவையும் தவறாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.ஜூலை 28: பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், பயணம் செய்த 152 பேரும் பலி.*****************************************************விளையாட்டு*****************************************************ஜூலை 1: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) புதிய தலைவராக சரத் பவார் தேர்வு.ஜூலை 3: 27வது பட்டம்: லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையரில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இது, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அரங்கில் இவரது 27வது சாம்பியன் பட்டம். இதுவரை இவர் ஒற்றையரில் 13, இரட்டையரில் 12, கலப்பு இரட்டையரில் 2 பட்டம் வென்றுள்ளார். ஜூலை 7ல் இவரது காலில் உடைந்த கண்ணாடி குத்தியதால், 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். இதனால் இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.ஜூலை 4: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.* உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் நெதர்லாந்து அணியை வீழ்த்திய ஸ்பெயின் அணி முதன்முறையாக கோப்பை வென்று சாதித்தது.* உலக கோப்பை கால்பந்து தொடரில் சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருதை உருகுவேயின் போர்லான் தட்டிச் சென்றார். அதிக கோல் அடித்தவருக்கான 'கோல்டன் ஷூ' விருதை ஜெர்மனியின் தாமஸ் முல்லர் பெற்றார்.* கேப்டன் திருமணம்: உத்தரகாண்ட் தலைநகர் டேஹ்ராடூனில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி (29) மற்றும் அவரது பள்ளி பருவ தோழி சாக்ஷி சிங் ராவத் (23) ஆகியோரது திருமணம் நடந்தது. இவர்கள், ஜார்க்கண்ட் தலை நகர் ராஞ்சியில் உள்ள டி.ஏ.வி., பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். திருமண நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங், நெஹ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஜூலை 17: பெல்ஜியம் அணிக்கு எதிரான ஹாக்கி தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.ஜூலை 20: பிரான்ஸ் அணிக்கு எதிரான ஹாக்கி தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.ஜூலை 22: கட் அவுட்: சுழல் ஜாலம்: இந்தியாவுக்கு எதிரான காலே டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த இவர், 133 டெஸ்டில் பங்கேற்று 800 விக்கெட் கைப்பற்றி உள்ளார். தவிர இவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்.ஜூலை 28: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து மாரடோனா நீக்கம்.ஜூலை 31: தென் கொரியாவில் நடந்த ஆசிய பெண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், சீனாவை வீழ்த்திய இந்திய அணி வெண்கலம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !