ஜூன்
**********************தமிழகம்**********************ஜூன் 3: மருத்துவமனையாகும் இல்லம்: பிறந்த நாளான ஜூன் 3ல் தனது இல்லத்தை தமிழக முதல்வர் கருணாநிதி தானமாக அளித்தார். தனது வாழ்க்கைக்குப் பின் இந்த இல்லம் ஏழை மக்கள் மருத்துவ வசதி பெறும் வகையில், மருத்துவமனையாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.ஜூன் 12: தமிழகத்தில் மருத்துவ படிப்பு படிக்காமல் அலோபதி சிகிச்சை மேற்கொண்ட சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் 170 பேர் கைது.* ரயில் தப்பியது: விழுப்புரம் அருகே பேரணி என்ற இடத்தில் ரயிலை கவிழ்க்கும் சதித் திட்டம் தீட்டிய சமூக விரோதிகளால் ரயில் தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதே தண்டவாளத்தில் சென்னையி லிருந்து திருச்சி சென்ற ராக்போர்ட் பயணிகள் ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தப்பினர்.ஜூன் 13: நித்யானந்தா ஜாமீனில் வெளியே வந்தார்.ஜூன் 17: தர்மபுரி அருகே திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரி, இன்னொரு லாரி மீது மோதி கவிழ்ந்ததில், 18 பேர் பலி.ஜூன் 22: சென்னை ஐகோர்ட், மற்றும் மதுரை ஐகோர்ட் கிளைகளில், முதன் முறையாக வக்கீல்கள் தமிழில் வாதாடினர்.ஜூன் 23:தமிழுக்கு மாநாடு: தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கிடைத்ததை கொண்டாடும் வகையில், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 5 நாட்கள் நடந்தது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்தார்.ஜூன் 24: சட்டப்பேரவை காங்., தலைவர் டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., மாரடைப்பால் மரணம்.*****************************************************இந்தியா*****************************************************ஜூன் 3: மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் திரிணமுல் காங்., பெரும்பாலான இடங்களில் வெற்றி.ஜூன் 4: 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக அரசு அறிவிப்பு.ஜூன் 5: மத்தியமைச்சர் சரத் பவாரின் மகள் சுப்ரியா மீது ஐ.பி.எல்., பங்குகளை பெற்றது தொடர்பாக குற்றச்சாட்டு.ஜூன் 8: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ராஜ்யசபா எம்.பி., ஆக மீண்டும் தேர்வு.ஜூன் 9: காஷ்மீரின் வளர்ச்சிப் பணி களுக்கு 1,000 கோடி ரூபாய் நிதியை பிரதமர் ஒதுக்கீடு.ஜூன் 10: இலங்கை அதிபர் ராஜபக்ஷே - பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இந்தியா சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என பிரதமர் அறிவிப்பு.ஜூன் 13: பீகார் வெள்ளச் சேதத்துக்கு 5 கோடி வழங்கியதை குஜராத் முதல்வர் மோடி விளம்பரப்படுத்தியதால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதனை திருப்பி அளித்தார்.* அந்தமான் நிகோபர் தீவுகளில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.ஜூன் 18: பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா திருமணம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது.* ராம்ஜெத்மலானி, ராம்விலாஸ் பஸ்வான், ஆனந்த் சர்மா ஆகியோர் ராஜ்யசபா எம்.பி., ஆக தேர்வு.ஜூன் 27: புதிய அணு ஒப்பந்தம்: இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே அணு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்நாட்டில் நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது, பிரதமர் மன்மோகன் சிங், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இடையே அணு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் மின்சக்தி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஜூன் 29: சட்டீஸ்கர் துணை ராணுவப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 ராணுவத்தினர் பலி.காலம் கடந்த தீர்ப்பு: போபால் விஷவாயு வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1984ல் யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். பாதிப்பு இன்றளவும் தொடர்கிறது. தீர்ப்பில் குற்றவாளிகள் 7 பேருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் முக்கிய குற்றவாளியான, தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஆன்டர்சனுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நிவாரண வழங்க வேண்டும் என தீர்ப்புக்கு எதிராக போராடி வருகின்றனர்.*****************************************************உலகம்*****************************************************ஜூன் 3: வங்கதேச தலைநகர் தாகாவில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 125 பேர் பலி.ஜூன் 6: ஜப்பான் பிரதமராக இருந்த யுகியோ அட்டோயாமா ராஜினாமா செய்ததையடுத்து, புதிய பிரதமராக நவோட்டா கான் தேர்வு.* உலக வரலாற்றில் 2010ம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டு என்று அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு.ஜூன் 9: அணு ஆயுதக் கொள்கைகளில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு எதிராக செயல்பட்டதற்காக, ஈரானுக்கு பொருளாதார தடை.* ஆன்டர்சன் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என அமெரிக்கா அறிவிப்பு.ஜூன் 10: தென்கொரியா 2வது முறையாக விண்ணுக்கு அனுப்பிய ஆராய்ச்சி தொடர்பான செயற்கைகோள் தோல்வி.*ஆப்கனில், ஒரு திருமண வீட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.ஜூன் 12: கிர்கிஸ்தானில் நடந்த உள்நாட்டு கலவரத்தில் 117க்கும் மேற்பட்டோர் பலி.ஜூன் 13: அர்மீனியா நாட்டில் 5,500 ஆண்டுகள் பழமையான காலணி கண்டுபிடிக்கப்பட்டது.ஜூன் 15: வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40 பேர் பலி.ஜூன் 21: சீனாவில் ஒரு சுரங் கத்தில் நடந்த வெடிவிபத்தில் சிக்கி, 46 பேர் பலி.ஜூன் 24: இஸ்லாமாபாத்தில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் இடையேயான சந்திப்பு.ஜூன் 25: சார்க் கூட்டமைப்பு நாடு களின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு, இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.ஜூன் 26: கனடா தலைநகர் டொரண்டோ நகரில் 4வது 'ஜி20 ' மாநாட்டின் போது எதிர்ப்பாளர்கள் போராட்டம்.ஜூன் 30: பதவி விலகல்: கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேபாள பிரதமராக இருந்த மாதவ் குமார் நேபாள், ராஜினாமா செய்தார்.*****************************************************விளையாட்டு*****************************************************ஜூன் 4: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.ஜூன் 6: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், சாம்பியன் பட்டம் வென்றார். ஜூன் 11: தென் ஆப்ரிக்காவில் 19வது 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் துவங்கியது. ஜூன் 13: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி கோப்பை வென்றது.* சென்னையில் நடந்த இந்திய கிராண்ட்பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா நேவல், சாம்பியன் பட்டம் வென்றார்.ஜூன் 20: சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையரில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார்.ஜூன் 24: இலங்கை அணிக்கு எதிரான பைனலில் வெற்றி பெற்ற இந்திய அணி, 15 ஆண்டுகளுக்கு பின் ஆசிய கோப்பையை வென்றது. * விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் ஜான் இஸ்னர், பிரான்சின் நிகோமஸ் மகுத் மோதிய போட்டி, 11 மணி 5 நிமிடம் வரைநடந்தது. ஜூன் 27: இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தொடர்ந்து மூன்று தொடர்களில் 'ஹாட்ரிக்' பட்டம் வென்று சாதித்தார்.