உள்ளூர் செய்திகள்

மார்ச்

******************தமிழகம்******************மார்ச் 3: திருச்சியில் 'கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை' முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.மார்ச் 5: சென்னையில் உள்ள மக்கள் 'டிவி' அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், மார்க்சிஸ்ட் அலுவலகத்தை பா.ம.க., வினரும் தாக்குதல் நடத்தினர்.மார்ச் 7: விழுப்புரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்மார்ச் 13: தமிழக சட்டசபையின் புதிய கட்டடத்தை பிரதமர் மற்றும் காங்., தலைவர் சோனியா ஆகியோர் திறந்து வைத்தனர்.மார்ச் 19: மதுரையில் அண்ணா பல்கலைக் கழகம் துவக்க தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு.மார்ச் 26: தமிழகம் முழுவதும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான மீனாட்சி சுந்தரம் கோர்ட்டில் சரணடைந்தார்.மார்ச் 27: 'தி.மு.க., 100' : பெண்ணாகரம் இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் 36 ஆயிரத்து 384 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2வது இடத்தை பா.ம.க., பெற்றது. அ.தி.முக., டெபாசிட் இழந்தது. இதன் மூலம் சட்ட சபையில் தி.மு.க., எம்.எல். ஏ.,க்களின் பலம் 100 ஆனது.மார்ச் 29: தண்டனை காலத்திற்கு முன் கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனு தள்ளுபடி.*****************************************************இந்தியா*****************************************************மார்ச் 2: நித்யானந்தாவின் மறுபக்கம்: பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்தில், சாமியார் நித்யானந்தா, தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது. இதனை யடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அவரது ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. கைது செய்யக் கோரி பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.மார்ச் 3: பா.ஜ., தலைவர் பிரமோத் மகாஜனை சுட்டுக்கொன்ற அவரது தம்பி, பிரவீண் மகாஜன் மரணமடைந்தார்.மார்ச் 4: உத்தரபிரதேசத்தின் பிரதாப்கார்க் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 70 பேர் பலி.மார்ச்., 9: மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா, பல எதிர்ப்பு களுக்கிடையே ராஜ்யசபாவில் நிறைவேறியது.மார்ச் 11: உலகின் 'டாப்-10' பணக்காரர்களில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 4வது இடம் பிடித்தார். மார்ச் 15: ராஜஸ்தானின் சவாய்மதோபுர் ஆற்றுப்பாலத்தில், சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ் கவிழ்ந்ததில் 26 பேர் பலி.* பூமாலை அல்ல.. பணமாலை: உத்தரபிரதேச முதல்வர் மாயாவதிக்கு, கட்சியின் வெள்ளிவிழாவின் போது தொண்டர்கள் சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணமாலை அணிவிக்கப்பட்டது. லோக்சபாவில் இப்பிரச்னை வெடித்தது.மார்ச் 16: பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அலுவலகம் அருகே, இரண்டு மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.மார்ச் 22: பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் விமானத்தில் வெடிகுண்டு இருந்ததால் பரபரப்பு.மார்ச் 23: தீ விபத்து: மேற்குவங்க தலைநகர் கோல் கட்டாவில், பார்க் தெருவில் உள்ள 150 ஆண்டுகால பழமையான ஸ்டீபன் கோர்ட் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தில் வணிகக் கடைகள், வீடுகள், அலுவலகங்கள் போன்றவை அமைந்துள்ளன. கட்டடத்தின் 5வது மற்றும் 6வது மாடியில் நிகழ்ந்த தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர். லிப்டில் ஏற்பட்ட 'ஷார்ட் சர்க்யூட்', தீ விபத்துக்கு காரணமாக அமைந்தது.மார்ச் 27: குஜராத் வன்முறை சம்பவம் குறித்து விசாரித்து வரும், சிறப்பு புலனாய்வு குழு முன் அம்மாநில முதல்வர் மோடி ஆஜரானார்.* உள்நாட்டிலேயே தயாரான, அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறனுடைய, பிருத்வி -2 மற்றும் தனுஷ் ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.மார்ச் 28: ஆந்திராவில் பழைய ஐதராபாத்தில் நடந்த மதக் கலவரத்தில் 2 பேர் பலி.மார்ச் 29: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக மீண்டும் தேர்வானார்.மார்ச் 31: நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு, பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்கினார்.*****************************************************உலகம்*****************************************************மார்ச் 1: பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட புயலால் 46 பேர் பலி.மார்ச் 3: ஈராக்கில் மூன்று இடங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்கு தலில் 33 பேர் பலி.* உகாண்டா நாட்டின் படுடா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 பேர் பலி.இனவெறிக்கு சிறுவன் பலி : ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், பஞ்சாபை சேர்ந்த குர்ஷான் சிங் என்ற மூன்று வயது சிறுவன், மார்ச்., 3ம் தேதி, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான்.மார்ச் 6: ஈராக்கில் நடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது, பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 24 பேர் பலி.மார்ச் 8: துருக்கி நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், 41 பேர் பலி, 61 பேர் காயம்.மார்ச் 9: 'தி ஹர்ட் லாக்கர்' படத்துக்கு ஆறு ஆஸ்கார் விருதுகளும், 'அவதார்' படத்துக்கு 3 ஆஸ்கார் விருதுகளும் கிடைத்தன.* கத்தாரில் உசேன் இந்தியாவைச் சேர்ந்த ஓவியரான எம்.எப்.உசேனுக்கு, கத்தார் நாடு குடியுரிமை வழங்கியது. இதனையடுத்து உசேன், தனது இந்திய பாஸ்போர்ட்டைஒப்படைத்தார்.உசேன் நாடு திரும்ப தடை இல்லை என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினாலும் அதை உசேன் நிராகரித்துவிட்டார். இந்து கடவுள்களை பற்றி, சர்ச்சைக்குரிய வகையில் ஓவியங்கள் வரைந்ததால் சிக்கலில் மாட்டினார். நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் இவர் மீது வழக்குகள் உள்ளன. இதனையடுத்து 2006ம் ஆண்டு முதல் கத்தார் நாட்டிலேயே இருந்து வருகிறார்.மார்ச் 23: அமெரிக்காவில், அதிபர் ஒபாமாவின் சிறப்பு திட்டமான 'மருத்துவ காப்பீடு திட்டம்' அமல்படுத்தப்பட்டது.மார்ச் 29: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களில் நடந்த குண்டுவெடிப்பில் 39க்கும் மேற்பட்டோர் பலி.* பாகிஸ்தானியரை கொலை செய்த வழக்கில், 17 இந்தியர்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட் கோர்ட் மரண தண்டனை விதித்தது.*****************************************************விளையாட்டு*****************************************************மார்ச். 1: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-2 என கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி. மார்ச். 9: ஐ.சி.சி., 'ஹால் ஆப் பேம்' பட்டியலில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் இடம் பெற்றார். மார்ச். 12: உலககோப்பை ஹாக்கி தொடரில் 8 வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தது இந்தியா. மார்ச். 13: உலககோப்பை ஹாக்கி பைனலில், ஜெர்மனியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன். மார்ச். 17: டில்லியில் நடந்த காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் விஜேந்தர் சிங் தங்கம் வென்றார். மார்ச்: 18: 'ஹாட்ரிக் நாயகன்': மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 'ஹாட்ரிக் விக்கெட்' கைப்பற்றினார் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி வீரர் பிரவீண் குமார். மார்ச். 21: நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான அணிகள் ஏலத்தில், புனே (ரூ. 1702 கோடி) மற்றும் கொச்சி (ரூ. 1533 கோடி) அணிகள் வெற்றி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !