மே
**********************தமிழகம்**********************மே 1: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊட்டி மலை ரயில், மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்டது.மே 6: தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கு லோக்சபா ஒப்புதல் அளித்தது.மே 11: தஞ்சை அருகே பாபநாசத்தில் ஏ.டி.எம்., மையத்தில் இருந்த வாட்ச்மேன் துப்பாக்கியால் சுட்டதில், போலீஸ் எஸ்.ஐ., பலி.மே 14: நடிகை குஷ்பு முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.மே 19: தமிழக மேலவைக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்.மே 20: தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் இன்ஜினியரிங் சேருவதற்கான தகுதி மதிப்பெண் சதவீதம் குறைப்பு. மே 29: அ.தி.மு.க.,விலிருந்து முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி நீக்கம்.*****************************************************இந்தியா*****************************************************மே 2: பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ஹாலப்பா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.மே 3: வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள், கிளைகளை இந்தியாவில் துவங்குவதற்கு வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.மே6: மரண தண்டனை: உலகையே உலுக்கிய 2008 மும்பையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி கசாப். கைது செய்யப்பட்டு தனி சிறையில் அடைக்கப்பட்ட கசாப் மீதான விசாரணை முடிவில், மும்பை சிறப்பு கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.மே 7: 'இந்தியா போஸ்ட்' சமூக வலை தளமான டுவிட்டரில் இணைந்தது. டுவிட்டரில் இணைந்த முதல் அரசு பொதுத்துறை நிறுவனம் இதுவே.மே 8: தண்டேவாடா பயங்கரவாதம்: மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சட்டீஸ்கரில் உள்ள தண்டேவாடா மாவட்டத்தில் மே 8ம் தேதி, வழக்கமான ரோந்து பணி முடிந்து மத்திய ரிசர்வ் படை போலீசார் மற்றும் பொதுமக்களும் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வழியில் நக்சலைட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், அவர்களது வாகனம் சிக்கி 50 பேரும் பலியானார்கள். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.மே 12: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பால கிருஷ்ணன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய நீதிபதியாக எஸ்.எச்.கபாடியா பொறுப்பேற்பு.மே 14: மத்திய பிரதேச மான்ட்லா மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ், மின் கம்பத்தில் மோதியதில் 32 பேர் பலி.* இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டிப்பு.மே 20: ஸ்பெக்ட்ரம் 3-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலத்தில், மத்திய அரசுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. மே 22: துபாயிலிருந்து மங்களூரு வந்த ஏர் இந்தியா விமானம், விபத்துக் குள்ளானதில் 158 பேர் பலி.மே 30: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் பேருந்து விபத்தில் 30 பேர் பலி.மே 31: ராஜினாமா: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் மே 31ல், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.சதியா... விபத்தா: மேற்குவங்கத்தில் உள்ள மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில், ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த பாதையில் வந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் மோதியதில் 141 பேர் பலியாகினர். நெஞ்சை உருக்கிய குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மாவோயிஸ்ட்டுகளின் சதித்திட்டமே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. பலியானவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.*****************************************************உலகம்*****************************************************மே 1: இந்தியா உட்பட 250 நாடுகள் பங்கேற்ற 'எக்ஸ்போ 2010 கண்காட்சி' சீனாவின் ஷாங்காய் நகரில் துவங்கியது. * ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 25 பேர் பலி.மே 2:பாகிஸ்தான் பயங்கரவாதி: அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள, 'டைம்ஸ்' சதுக்கத்தில் மே 2ல், பாகிஸ்தான் பயங்கரவாதி பைசல் ஷாகாத், காரில் வைத்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதுமே 9: இந்தோனேசியாவின் அசே மாகாணத்தில் 7.2 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.மே 12: தென் ஆப்ரிக்காவிலிருந்து, லிபியா சென்ற விமானம் டிரிபோலி ஏர்போட்டில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 103 பேர் பலி.* பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, புதிய பிரதமராக டேவிட் கேமரான் பதவியேற்பு.மே 17: ஆப்கானிஸ்தானின் குஷ் மலைப் பிரதேசத்தில், விமானம் மோதி 43 பேர் பலி.மே 21: பாகிஸ்தானில் பேஸ்புக் இணைய தளத்தை அடுத்து யூ-டியூப்-க்கும் அந்நாட்டில் தடை.மே 25: மும்பை தாக்குதல் வழக்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட, பாகிஸ்தானின் ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத்தை, பாக்., ஐகோர்ட் விடுதலை செய்தது.மே 28: பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 98 பேர் பலி.மே 29: மத்திய அமெரிக்காவில் புயல், வெள்ளத்தில் 180 பேர் பலி.மே 31:அத்துமீறல்: மே 31ல், துருக்கியிலிருந்து காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது, இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள்.*****************************************************விளையாட்டு*****************************************************மே 2: முதல் இந்தியர்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில், 101 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா, சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் சதம் கடந்த முதல் இந்தியர் மற்றும் 3வது சர்வதேச வீரர் என்ற சாதனை படைத்தார்.மே 3: சர்வதேச ஹாக்கி அரங்கில் இருந்து இந்தியாவின் திலிப் டிர்கே ஓய்வு. மே 7: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.மே 11: பல்கேரியாவில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெசலின் தபலோவை வீழ்த்தினார்.மே 14: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் ஓய்வு.மே 16: 'டுவென்டி-20' உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி, கோப்பை வென்றது.* அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரின் பைனல் மழை காரணமாக கைவிடப்பட, இந்தியா மற்றும் தென் கொரிய அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இதன்மூலம் இத்தொடரில் முதன்முறையாக கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது.மே 30: கஜகஸ்தானில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் மேரி கோம், சரிதா தேவி, தங்கம் வென்றனர்.