உள்ளூர் செய்திகள்

2024 - தொழில்

ஜன. 1: பேக்கிங் பொருட்களில் தயாரிப்பு தேதி, விற்பனை விலை அச்சிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஜன. 1: கார்ட்டூன் கதாபாத்திரமான 'மிக்கி மவுஸ்' தொடர்பான 'டிஸ்னி' நிறுவனத்தின் 95 ஆண்டு கால காப்புரிமை காலாவதியானது. ஜன. 5: பெட்ரோல் உடன் எத்தனால் கலப்பு. மத்திய அரசுக்கு ரூ. 24,300 கோடி சேமிப்பு. ஜன. 5: மலிவு விலை 'ஸ்குரூ' இறக்குமதிக்கு மத்திய அரசு தடை. ஜன. 6: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என ஐ.நா., கணிப்பு. ஜன. 8: சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.ஜன. 18: அதிகளவில் தங்கம் இருப்பு வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா (8133.46 டன்) முதலிடம். இந்தியாவுக்கு 9வது இடம் (822.09 டன்). ஜன. 24: பத்தாண்டுகளில் வருமான வரி செலுத்துபவர் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு. ஜன. 26: ஐந்தாண்டுகளில் இந்தியாவில் கார் விற்பனை விலை 50 சதவீதம் அதிகரிப்பு. பிப். 1: தொடர்ந்து ஏழு முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் சாதனை. பிப். 13: இலங்கை, மொரீஷியஸ், அபுதாபியில் இந்தியாவின் யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை சேவை துவக்கம். மார்ச் 18: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தன் பேரனுக்கு ரூ. 240 கோடி மதிப்பு பங்குகளை பரிசாக வழங்கினார். ஏப். 8: மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின், சந்தை மதிப்பு முதன்முறையாக ரூ. 4 லட்சம் கோடியை எட்டியது. ஏப். 11: லட்சத்தீவில் கிளை துவக்கிய முதல் தனியார் வங்கியானது ஹெச்.டி.எப்.சி.மே 1: 127 ஆண்டுகால கோத்ரேஜ் நிறுவனம் இரண்டாக பிரிந்தது. மே 1: ஜிம்பாப்வே 'ஜிக்' என்ற புதிய கரன்சியை அறிமுகம் செய்தது. மே 1: ஏப்ரல் ஜி.எஸ்.டி.,வரி வருவாய் ரூ. 2.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.மே 30: இந்தியாவின் ரூபே கார்டு சேவை மாலத்தீவில் துவக்கம். ஜூலை 12: 'ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' குழும தலைவர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் நடந்தது. ஜூலை 30: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முதலிடம். ஆக. 23: பங்குச் சந்தையில் ஈடுபட ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு 5 ஆண்டு தடை. செப். 4: மியூச்சுவல் பண்டு திட்டத்தில் குறைந்தது ரூ. 250 முதலீடு செய்யலாம். இதற்கு முன் ரூ. 500 இருந்தது. செப். 12: இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக ஷைலேஷ் சந்திரா தேர்வு. செப். 12: அமெரிக்க விண்வெளி மையமான 'நாசா'விடம் இருந்து ஆர்டர் பெறும் முதல் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமானது 'பிக்சல். அக். 11: 'டாடா' அறக்கட்டளை தலைவரானார் நோயல் டாடா. அக். 22: இந்தியாவின் யு.பி.ஐ., பரிவர்த்தனை மாலத்தீவில் அறிமுகம். நவ. 11: டாடா குழுமத்தின் 'விஸ்தாரா', ஏர் இந்தியா நிறுவனங்கள் இணைந்தன. நவ. 26: கியூ.ஆர்.குறியீடு உள்ளிட்ட கூடுதல் வசதியுடன் 'பான் கார்டு 2.0' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். நவ. 27: 'சாம்சங்' சி.இ.ஓ., வாக 86 ஆண்டுகளில் முதன்முறையாக அக்குடும்பத்தை சாராதவர் (கிம் கியூங் - ஆ) நியமனம். டிச. 1: உலகின் 'விக்' ஏற்றுமதி சந்தையில் இந்தியா (88% பங்கு) முதலிடம். டிச. 2: 'ஊபர் இந்தியா' நிறுவனத்தின் முதல் நீர்வழிப்போக்குவரத்து (படகு சவாரி) காஷ்மீரின் தால் ஏரியில் துவக்கம். டிச. 3: வங்கி கணக்குகளில் 'நாமினி' எண்ணிக்கையை 1ல் இருந்து 4 ஆக உயர்த்துவதற்கான மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றம். டிச. 3: பாட்டில் மினரல் குடிநீரை, அதிக ஆபத்தான உணவுப்பட்டியலில் சேர்த்தது இந்திய உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாட்டு அமைப்பு. டிச. 6: 'சைபர் கிரைம்' மோசடியில் ஜன. - செப்., ல் இந்தியாவில் ரூ. 4636 கோடி ஏமாற்றப்பட்டது. 2.28 லட்சம் புகார்கள் பெறப்பட்டன.டிச. 8: ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அலைபேசி கட்டணத்தை உயர்த்தின. இதனால் 55 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., க்கு மாறினர்.டிச. 17: அலைபேசி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடம் பெற்றது. டிச. 18: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பறிமுதல் சொத்துகளை விற்று ரூ. 14,131 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டது.டிச. 19: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 85.28 என சரிவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !