2024 ல் நடந்த அறிவியல் நிகழ்வுகள்
ஜன. 1: கருந்துளையில் இருந்து வெளிவரும் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்ய 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோளை 'இஸ்ரோ' அனுப்பியது. ஜன. 11: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆளில்லா விமானம் 'திருஷ்டி 10 ஸ்டார்லைனர்' அறிமுகம். ஜன. 18: அமெரிக்க விண்வெளி மையம் 'நாசா' 2021ல் செவ்வாய்க்கு அனுப்பிய 'இன்ஜுனிட்டி' ஹெலிகாப்டர் சேதமடைந்ததால் பயணம் முடிவுக்கு வந்தது. மார்ச் 11: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி - 5 ஏவுகணை சோதனை வெற்றி. இது 6000 கி.மீ., துாரம் சென்று தாக்கும். மார்ச் 16: சீனாவின் யூனிட்ரி நிறுவனம் மணிக்கு 11 கி.மீ., வேகத்தில் நடக்கும் ரோபோ மனிதனை உருவாக்கி சாதனை. ஏப். 14: தண்ணீரில் இருந்து பிளாஸ்டிக் நுண்துகள்களை பிரித்தெடுக்கும் 'ஹைட்ரோஜெல்' -ஐ உருவாக்கியது பெங்களூருவின் ஐ.ஐ.எஸ்.சி., நிறுவனம். ஏப். 19: இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான 'க்ரூஸ்' ஏவுகணை சோதனை வெற்றி. ஏப். 30: 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்கவிளைவை சிலருக்கு ஏற்படுத்தும் என பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் ஒப்புதல். மே 5: புதிதாக 27,500 விண்கற்களை 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டாக்டர் எட் லுா தலைமையிலான குழு கண்டறிந்தது. மே 9: மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் திரவ ராக்கெட் இயந்திர வெப்ப சோதனை வெற்றி.மே 20: அமேசான் நிறுவனத்தின் 'புளு ஆர்ஜின்' விண்கலம் மூலம் முதன்முறையாக இந்தியர் (ஆந்திராவின் கோபிசந்த்) விண்வெளி பயணம்.ஜூன் 3: வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி என ஆறு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் தோன்றின. ஜூலை 3 : சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய 'ஆதித்யா எல்1' விண்கலம், தன் முதல் ஹாலோ சுற்றுப்பாதையை நிறைவு செய்தது. ஜூலை 22: உலகின் சராசரி வெப்பம் அதிகபட்சமாக 17.15 டிகிரி செல்சியஸ் பதிவானதாக ஐரோப்பாவின் 'சி3எஸ்' நிறுவனம் அறிவிப்பு. ஆக. 16: எடை குறைந்த (10 - 500 கிலோ) செயற்கைக்கோளை ஏவுவதற்கான எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதில் புவியை கண்காணிக்கும் 'இ-ஓ.எஸ்., - 08' செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. ஆக. 22: செவ்வாய் கோளில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆக. 24 : இந்தியாவின் முதல் மறு பயன்பாட்டு ராக்கெட் 'ரூமி' சோதனை வெற்றி.செப். 27: 'சி/2023 ஏ3' வால் நட்சத்திரம் பூமியை கடந்து சென்றது. அடுத்து 80 ஆயிரம் ஆண்டுக்குப்பின் தான் மீண்டும் வரும். அக். 17: வியாழன் கோளின் 95 நிலவுகளில் ஒன்றான 'ஐரோப்பா'வுக்கு, 'நாசா' விண்வெளி மையம் 'ஐரோப்பா கிளிப்பர்ஸ்' விண்கலத்தை ஏவியது. ஏலியன் பற்றி அறிவதே நோக்கம்.நவ. 7: ஜப்பான் விஞ்ஞானிகள், மரத்திலான உலகின் முதல் செயற்கைக் கோளை உருவாக்கினர். நவ. 18: இந்தியாவின் 'ஜிசாட் 20' (எடை 4700 கிலோ), தகவல் தொடர்பு செயற்கைக்கோளை, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் விண்ணில் ஏவியது.டிச. 30: இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்துக்காக, 'பி.எஸ்.எல்.வி., சி 60' ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.ஆஹா ஆதித்யாஜன. 8: சூரியனை ஆராய இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுப்பிய 'ஆதித்யா எல்1' விண்கலம், 15 லட்சம் கி.மீ., தொலைவில் 'லாக்ராஞ்ஜியன் பாயின்ட்டில்' நிலைநிறுத்தப்பட்டது.எப்போது திரும்புவர்ஜூன் 7: சர்வதேச விண்வெளி மையத்துக்கு அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆய்வுக்கு (எட்டு நாள்) சென்றனர். அவர்கள் பயணித்த 'ஸ்டார்லைனர்' விண்கலம் தொழில்நுட்ப கோளாறால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இருவரும் 2025 மார்ச்சில் பூமிக்கு திரும்புவர் என நாசா தெரிவித்துள்ளது. நிலைக்குமா நீலக்குறிஞ்சிஆக. 20: இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் அழியும் தாவரங்களின் பட்டியலில் இந்தியாவின் நீலக்குறிஞ்சி செடிகள் சேர்ப்பு. இரண்டாவது நிலவு செப். 29 - நவ. 25: பூமியின் தற்காலிக நிலவாக '2024 பி.டி.5' விண்கல் சுற்றி வந்தது. பூமிக்கு நிலவு மண்ஜூன் 25: சீனாவின் 'சாங்கி6' விண்கலம், நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கியது. பாறை, மண் மாதிரியை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பியது. விண்வெளியில் அதிக நாள்பிப். 5: சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐ.எஸ்.எஸ்.,) அதிக நாள் (879) தங்கியிருந்த வீரரானார் ரஷ்யாவின் ஓலக் கோனென்கோ. ஐந்தாவது நாடுஜன. 19: ஜப்பான் 2023 செப். 6ல் அனுப்பிய 'ஸ்லிம்' விண்கலத்திலுள்ள லேண்டர் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்குப்பின் இச்சாதனையை நிகழ்த்திய 5வது நாடானது.நீளமான பவளப்பாறைநவ. 16: பசிபிக் கடலில் சாலோமன் தீவில் உலகின் பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு. நீளம் 105 அடி. அகலம் 112 அடி. உயரம் 18 அடி.