கூலி வேலை செய்யும் நடிகர்!
மோகன்லால் இரட்டை வேடத்தில் நடித்த, போட்டோகிராபர் என்ற மலையாளப் படத்தில், வயனாடு ஆதிவாசி காலனியான தாத்தூரைச் சேர்ந்த மணி என்ற ஆதிவாசி சிறுவன் நடித்தார். இவரின் நடிப்பை பாராட்டி, 'சிறந்த குழந்தை நட்சத்திரம்' விருதை வழங்கியது கேரள அரசு. இச்சிறுவனிடம் நடிப்பு திறமை இருந்த போதும், இப்படத்திற்கு பின், இவரை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காலங்கள் ஓடின. சிறுவன் மணி, இளைஞராக வளர்ந்தார். இப்போது, சினிமா கனவுகளை மூட்டை கட்டி வைத்து, குடும்பத்தைக் காப்பாற்ற கூலி வேலை செய்து வருகிறார்.— ஜோல்னாபையன்.