உள்ளூர் செய்திகள்

அசைவத்திற்கு மாறிய சைவ கொக்கு!

மறைந்த கவர்ச்சி நடிகை, சிலுக்கு ஸ்மிதா வேடத்தில் நடிப்பதற்காக, உடலை சற்று பருமனாக்கிக் கொண்டார், இந்தி நடிகை, வித்யா பாலன். டர்ட்டி பிக்சர் என்ற அப்படம், சக்கைபோடு போட்டது. ஆனால், ஏறிய எடையை குறைப்பதற்காக, உடற்பயிற்சி மற்றும், 'டயட்'டை பின்பற்றிய போதும், உடல் எடை குறையவில்லை. மருத்துவரை அணுகியபோது, உடலில் போதுமான சத்து இல்லை என்று கூறி, முட்டை சாப்பிடக் கூறியுள்ளனர். சுத்த சைவமான வித்யா, இப்போது, வேறு வழியின்றி முட்டை மட்டும் சாப்பிடத் துவங்கியுள்ளவர், 'முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட பழகி விட்டேன்...' என்கிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !