உள்ளூர் செய்திகள்

கவிதைச் சோலை

இனி கவலையில்லை!எவ்வளவு துன்பம் வந்தாலும்கவலையில்லைஎதிர்நீச்சல் போடுவோருக்கு!எவ்வளவு ஆழம் வந்தாலும்கவலையில்லைநீரில் மிதக்கும் பூக்களுக்கு!எவ்வளவு இன்பம் வந்தாலும்கவலையில்லைசலனமில்லா மனிதர்களுக்கு!எவ்வளவு ஏற்ற - இறக்கம் வந்தாலும்கவலையில்லைநடுநிலையோடு அணுகுவோருக்கு!எவ்வளவு செல்வம் வந்தாலும்கவலையில்லைவள்ளல் தன்மை கொண்டோருக்கு!எவ்வளவு நஷ்டம் வந்தாலும்கவலையில்லை|நேரெதிர் எண்ணம் கொண்டவர்களுக்கு!எவ்வளவு பேரிடிகள் வந்தாலும்கவலையில்லைஎதையும் தாங்கும் இதயம் கொண்டோருக்கு!ஆம் மனிதா...எது வரினும்சகலமும் கடந்து சாதனை செய்...இது உனக்கான சோதனை என நினை...வெற்றி உனதே!— முகவை முத்தூஸ், தொண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !