உள்ளூர் செய்திகள்

இரண்டு கண்டங்கள் வழியாக பயணிக்கும் ரயில்!

நிலக்கரியால் இயங்கும் ரயில்களை, இன்று பல நாடுகள் கைவிட்டு விட்டன. ஆனால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், பழமையான இந்த ரயில்கள், இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன.ஏழு நாட்கள் தொடர்ந்து பயணித்து, 9,289 கி.மீ., தொலைவில் உள்ள சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கை அடைகிறது, 'ட்ரான்ஸ் கரீபியன்' என்ற இந்த நிலக்கரி ரயில். இரண்டு கண்டங்கள் மற்றும் 87 பெரிய நகரங்கள் வழியாக பயணிக்கும் இந்த ரயிலில், கட்டணமாக, 23 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. உலகெங்கும் உள்ள சுற்றுலா பயணியர், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலக்கரி ரயிலில் பயணிக்க, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !