உள்ளூர் செய்திகள்

பாம்பு பிடிக்க கற்றுத் தரும் பல்கலைக்கழகம்!

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பர். அதை பிடிக்க கற்றுத் தரும் படிப்பு, ஒரு பல்கலைக்கழகத்தில் இருக்கிறது.ஆஸ்திரேலியா நாட்டில் வடக்கு பகுதியில் உள்ள, சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகம், உலகிலேயே அதிக விஷம் கொண்ட பாம்புகளை லாவகமாக பிடிப்பதற்கு கற்றுத் தருகிறது.'பாம்புக்கு மனிதர்கள் பயப்படுகின்றனர். ஆனால், அவை மனிதர்களை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை...' என்கிறார், பல்கலையின் பாம்பு பிடி பயிற்சியாளர், ஜானி.இதுவரை, 30 மாணவர்கள் பயிற்சியை முடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பயிற்சியை விரிவுப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.'பல்கலைக்கழகத்தில் ஒரு துறை மூலம், இப்படி ஒரு பயிற்சி தேவையா?' என, இந்தப் புதுமையான பயிற்சி குறித்து, விமர்சனங்களும் எழுந்துள்ளன. - ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !