உள்ளூர் செய்திகள்

ஏசி வசதி இல்லாத விமான சேவை!

'ஏசி' வசதி இல்லாத விமானமும், விமான நிறுவனம் பற்றி அச்சிட்ட காகிதத்தையே விசிறியாக பயன்படுத்தும் பயணிகளும் இருக்கின்றனர்.கென்யாவின் வடக்கு பகுதியில், லாமு என்ற தீவில், 'போக்கர்' என்ற நிறுவனத்தின் விமானங்கள் தான், 'ஏசி' வசதியின்றி வானில் பறக்கிறது. மீன் பிடி பிரதேசம், லாமு. இன்னும் பழமையை கைவிடாத மக்களில் அதிகம் பேர், மீன்களை பிடித்து, விற்பனை செய்து வருகின்றனர்.லோக்கல் பேருந்துகள் போல, பல இடங்களிலிருந்து, 'போக்கர்' விமானங்கள், ஆட்களை ஏற்றிச் செல்கின்றன. இங்குள்ள சாலைகளில், கழுதைகள் மீது சவாரி செய்பவர்களை அதிகம் காணலாம்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !