உள்ளூர் செய்திகள்

சாதிக்க மனம் இருந்தால் போதும்!

கேரள மாநிலம், வயநாடு மனந்தவாடி பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர், அபிமன்யு. பழங்குடி இனத்தை சேர்ந்த இவர், சிறந்த விளையாட்டு வீரர். சமீபத்தில் நடந்த மாவட்ட அளவிலான, 'போல்வால்ட்' எனப்படும் உயரம் தாண்டுதல் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார். உயரம் தாண்டும் போட்டிக்கு தேவையான கம்பின் விலை ஒரு லட்சம் ரூபாய். வறுமை காரணமாக அதை வாங்க முடியாததால், சாதாரண மூங்கில் கம்பை பயன்படுத்தியுள்ளார். இந்த விளையாட்டுக்கு தேவையான நீளமான கம்பை, இவரே காட்டுக்கு சென்று, வெட்டி எடுத்து வந்து, பயிற்சி செய்து, போட்டியில் தங்கம் வென்று இருக்கிறார். இவரது சாதனை பற்றி அறிந்த, கேரள ஆதிவாசி நல அமைச்சர், போட்டிக்கான கம்பு ஒன்றை வாங்கி, அபிமன்யுவுக்கு பரிசளித்துள்ளார். - ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ravi om namasivaya
டிச 16, 2025 09:59

வறுமை ஒரு போதும் வாழ்க்கைக்கு தடையில்ல வாய்ப்பு பல பேருக்கு அமைவதில்லை. வாழ்த்துகள் அபிமன்யு


Ram Siri
டிச 16, 2025 07:36

Congratulations


saiprakash
டிச 15, 2025 15:10

வாழ்த்துக்கள்